குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக கிழக்கு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன

குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக கிழக்கு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன, அரசும் அதை எதிர்பார்த்தே இருந்தது, இதனால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன் திட்டமிட்டவாறே செய்கின்றது

இந்த குடியுரிமை சர்ச்சை இன்று வந்ததல்ல, முதன் முதலில் இதை பாராளுமன்றத்தில் பேசியது யார் தெரியுமா?

அந்த பெண் சிங்கம் ஜெயலலிதா

ஆம் 1983ல் வடகிழக்கு மாநிலங்களில் நடப்பதென்ன? அந்நிய நாட்டினர் அங்கு குவியும் நிலையில் அரசின் நிலைப்பாடு என்ன? என முதன் முதலில் கேட்டது அவர்தான்

இந்திரா பஞ்சாபிலும் ஈழத்திலும் கவனமாய் இருந்த நேரமது, ஜெயாவின் அந்த கேள்விகள் இந்திராவினை மிகவும் கவர்ந்தன, நாட்டுபற்றுமிக்க அந்த பேச்சுத்தான் பின்னாளில் இந்திராவுடன் விருந்துக்கு ஜெயாவினை கொண்டு சேர்த்தது

அந்தகாலத்திலே தொடங்கிய சிக்கலைத்தான் இன்று அமித்ஷா தீர்த்திருக்கின்றார்

இதற்கு காங்கிரஸும் திமுகவும் பொங்குகின்றன, தன் மேலான சிறை கறையினை கழுவ இந்த விஷயத்தை கையில் எடுத்து சீறுகின்றார் சிதம்பரம், அவர் முழு அரசியல்வாதியான நேரமிது

காங்கிரசும் திமுகவும் தேசத்துக்கு எதிராக பேசும்பொழுது அவர்களின் கூட்டாளியும் உள்ளே வரவேண்டும் அல்லவா? அவரும் வந்துவிட்டார்

இம்ரான்கான் எனும் அவர்களின் ரகசிய கூட்டாளி இந்திய சட்டதிருத்தம் பற்றி குறைபடுகின்றார், நம் நாட்டு விவகாரத்தில் அவருக்கு என்ன கவலை என்பதுதான் தெரியவில்லை

அவருக்கென்ன? கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒரு பயலும் பாகிஸ்தானில் குடியேறபோவதில்லை, அதனால் அந்த வயிற்றெரிச்சலில் இந்தியாவில் குடியேறிய கள்ள குடியேறிகள் பற்றிய இந்திய அரசின் நிலைப்பாடு பற்றி ஏதாவது சொல்லியாக வேண்டிய கட்டாயம் அவருக்கு