திமுகவினை வழிநடத்த சர்வாதிகாரி சரியான நபரே அல்ல
நாம் அன்றே சொன்னோம், திமுகவினை வழிநடத்த சர்வாதிகாரி சரியான நபரே அல்ல, அவரால் அக்கட்சியினை நடத்தமுடியாது
அக்கட்சி கனிமொழி அல்லது தயாநிதிமாறனிடம் சிக்கினால் கூட கொஞ்ச நாள் தாங்கும் ஆனால் சர்வாதிகாரி விடமாட்டார்.
திமுக என்பது இல்லாத மாயமானை காட்டி மக்களை மயக்கும் ஒரு மாய கட்சி, அதை கொண்டு செல்ல மிகபெரும் சாமார்த்தியமும் இன்னும் பல நுட்பங்களும் தேவை
மிக பெரும் தந்திரமும் மாய வேலைகளும் ரகசிய சித்து விளையாட்டும் அவசியம், சர்வாதிகாரிக்கு அது சுட்டு போட்டாலும் வராது
இதோ பழ.கருப்பையா முதல் ஆளாக செங்கலை உருவுகின்றார், இன்னும் இருந்து பாருங்கள் நிறைய செங்கல் உருவபடும்,
கடைசியில் அந்த சர்வாதிகாரியும் அவர் மகனும் கல்குவியலின் அடியில் கிடப்பார்கள்