ஏதோ புகைகின்றது அல்லவா?

இந்த ரிச்சர்ட் பிரான்சன் பிரிட்டனின் அம்பானி, அங்கு அவர் செய்யாத தொழில் இல்லை, விற்காத பொருள் இல்லை

மலிவுவிலை கட்டன விமானமான வர்ஜீனியா ஏர்லைன்ஸ் உட்பட 400 கம்பெனிகளுக்கு சொந்தக்காரர், இதுபோக அவரின் மற்ற தொழில்களை எண்ண கால்குலேட்டரும் போதாது

அப்படிபட்ட மகா கோடீஸ்வரர் முன்பு மும்பை புனே இடையே ஹைப்பர் லூப் எனப்படும் அதிநவீன போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்கினார், ஆட்சி மாறிய பின் கைவிடுகின்றார்

அந்த ரத்து அறிவிப்புக்காக மும்பை வந்த பிராட்சன் ஒரு குண்டை வீசிவிட்டார்

அது என்னவென்றால் அவர் ஒருமுறை டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தாராம் அதில் அவரின் பூர்வீகம் தமிழ்நாடாக இருக்கலாம் என சொல்லிவிட்டார்களாம்

வாய்ப்பு இல்லாமல் இல்லை, வெள்ளையர் வந்து இங்கு கலந்ததும் அதில் ஆங்கிலோ இந்தியன் என ஒரு இனம் உருவானதும் இன்னும் ஏகபட்ட சமாச்சாரங்கள் எல்லாம் உண்டு

அந்த வழியில் பிராட்சன் வந்திருக்கலாம்

இவர் டி.என்.ஏ டெஸ்ட் எந்த அலுவலகத்தில் எடுத்தார் என தெரியவில்லை, நாம் தமிழர் தும்பிகளிடம் எடுக்காமல் இருந்தால் உண்மையாக இருக்கலாம்

சரி , இதுகாலமும் இல்லாமல் அன்னார் ஏன் நான் திடீர் தமிழன் என்கின்றார்

அந்த ஹைப்பர் லூப் திட்டம் மும்பை டூ புனேவுக்கு பதில் தமிழ்நாட்டில் திருச்சி டூ சென்னைக்கு மாற்றபடுமோ?

ஏதோ புகைகின்றது அல்லவா? பார்க்கலாம்