இந்திரா 2019

இந்தியாவும் ரஷ்யாவும் வருடம் தோறும் கூட்டு ரானுவ பயிற்சி நடத்தும், வழக்கமாக முப்படைகளில் ஏதாவது ஒரு பிரிவுதான் இடம்பெறும்

ஆனால் இந்த வருடம் முப்படைகளும் பயிற்சியில் இணைகின்றன கோவா தொடங்கி குஜராத் வரையிலான பகுதியில் இது இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கின்றன‌

மிக பிரமாண்ட பயிற்சி இது கப்பல்படையும் விமானபடையும் மிக பெரும் ஒத்திகைக்கு தயாராகின்றது, தரைபடை அதன் தளத்தில் தயாராக நிற்கின்றது

இந்த பயிற்சிக்கு பெயர் என்ன தெரியுமா? “இந்திரா 2019”

இந்த இந்தோ ரஷ்ய பயிற்சி 2003ல் இருந்தே நடக்கின்றது, 16ம் ஆண்டாக இந்த வருடமும் தொடர்கின்றது

இந்திரா என்பது இந்தோ ரஷ்ய உறவை குறிக்கும் வடிவபெயர் (IND-RA) என்றாலும், இந்திர ரஷ்ய உறவினை தொடங்கிவைத்த இந்திராவின் பெயரையும் குறிக்கும்

உண்மையில் அதன் அர்த்தம் அதுதான்

மோடி அரசும் அதை மாற்றாமல் தொடர்கின்றது

நாம் கவனிக்கின்றோம், நேருவினை அவ்வப்போது பாஜகவினர் தாக்குவார்களே தவிர, இந்திராவினை அவ்வளவு விமர்சிக்கமாட்டார்கள்

தேசத்துக்காக இந்திரா வழியில்தான் நாம் நடக்கின்றோம் என மனமார நம்புகின்றார்கள், அது உண்மையும் கூட