இந்திய எதிரிகளின் வரிசை மிக அழகாக தெரியும் நேரமிது
பாலஸ்தீனம் என்றொரு நாடு இருந்தது, அதை பிரித்து இஸ்ரேலை உருவாக்கினார்கள்
இஸ்ரேலை அழித்தொழித்து முழு பாலஸ்தீனம் படைக்க போகின்றோம் இதனால் பெரும் போர் தொடங்கபோகின்றது, பாலஸ்தீன இஸ்லாமியரெல்லாம் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் அப்பொழுது யூதரை ஒழிப்பது சுலபம், முழு பாலஸ்தீனம் கிடைத்தபின் நீங்கள் உள்ளே சென்று மகிழ்வாக வாழலாம் என அழைப்பு விடுத்தன எகிப்து உட்பட ஒரு டஜன் நாடுகள்
அவர்களை நம்பி சென்றனர் பாலஸ்தீன இஸ்லாமியர் கடும் யுத்தம் தொடங்கியது
போரில் எதிர்பாரா பின் விளைவாக ஒரு டஜன் நாடுகளை போட்டு சாத்தி அவர்கள் குடுமியினை பிடித்து கொண்டது இஸ்ரேல்
“விட்ருயா.. தெரியாம வந்துட்டோம்ய்யா.. உன் பக்கமே வரமாட்டோம்யா..” என கும்பிடு போட்டு ஓடின அந்த தேசங்கள்
ஓடிய தேசங்கள் சும்மா இருந்ததா? , பாலஸ்தீனியரை நோக்கி இனி இஸ்ரேலுக்கு சென்று அமைதியாக வாழபாருங்கள் என சொல்லிவிட்டு அவர்களை விரட்டின
இஸ்ரேலோ அவர்கள் அகதிகள் என திருப்பி விரட்டியது
ஆம் ஒரு இஸ்லாமிய நாடும் இன்றுவரை அம்மக்களுக்கு முறையான வாழ்வும் வழங்கவில்லை, தன்நாட்டு குடிமக்களாய் ஏற்கவுமில்லை
அவர்களின் அவலவாழ்வு இன்றும் தொடர்கின்றது, துடைக்க முற்படுவோர் யாருமில்லை
ஆம் இஸ்லாமிய நாடுகளாயினும் செல்வத்தில் கொழிப்பதாயினும் சக பாலஸ்தீன இஸ்லாமியரை ஏற்க அவர்கள் தயாராக இல்லை
உலக யதார்த்தம் இதுதான்
உலக நாடுகள் செய்தால் தவறில்லை, இந்தியா செய்ததால் தவறு
உலகை கவனியுங்கள் பாகிஸ்தான் எனும் பைத்தியகார நாட்டை தவிர ஒரு நாடும் இந்த சட்டதிருத்தத்தை பற்றி ஒருவார்த்தை பேசவில்லை, காரணம் யதார்த்தம் அவர்களுக்கு புரிகின்றது
கத்துவது யாரென்றால் பாகிஸ்தான், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்
ஆக இந்திய எதிரிகளின் வரிசை மிக அழகாக தெரியும் நேரமிது