3 சூரியன்கள் வானில் தெரிந்திருக்கின்றன
இயற்கை அவ்வப்போது சில ஆச்சர்ய சுவாரஸ்யங்களை கொடுக்கும், அப்படி சீனாவில் கொடுத்திருக்கின்றது
3 சூரியன்கள் வானில் தெரிந்திருக்கின்றன, ஒரு நிஜ சூரியன் மற்ற இரண்டும் சூரியனின் பிம்பம்
வானில் மேக திரள்களில் இருக்கும் நீரின் விளைவில் சில பிரதிபலிப்புகள் தோன்றும் ,வானவில் அப்படியானது
வெகு அபூர்வமாக சூரியன் பிரதிபலிக்கும்
அப்படி இரு பக்கமும் பிரதிபலிக்கபட்டு 3 சூரியனாக சீனாவில் தெரிந்திருக்கின்றது
வெகு அபூர்வமாக நடக்கும் விஷயம் அது, இதனால் உலகம் 3 உதய சூரியன்களின் காட்சியினை பார்த்துகொண்டிருக்கின்றது
ஆம் சீன வானில் 3 உதய சூரியன்கள் வந்திருக்கின்றன, தமிழக அரசியல் வானில் உதயசூரியன் என சொல்லி 3ம் தலைமுறை வந்திருக்கின்றது என்பதுதான் தமிழக சோகம்
