அய்யய்யோ
அய்யய்யோ பாஜக வந்தாயிற்று இனி மதகலவரம் வரும் என்றார்கள், ஒரு கலவரமும் வரவில்லை நாடு அமைதியாய் இருக்கின்றது
அய்யய்யோ இனி ராமர் கோவிலை கட்டிவிட்டு மதுரா மசூதி இடிப்பார்கள் இந்தியா எரியும் என்றார்கள் ஒன்றும் ஆகவில்லை
அய்யய்யோ இனி கிறிஸ்தவன் பைபிள் வாசிக்கமுடியாது பாஜக ஒழித்துவிடும் என்றார்கள், வேளாங்கண்ணி திருவிழா வழக்கம் போல் நடக்கின்றது, தினகரனின் பேத்தி கூட போதிக்கின்றார்
எந்த ஆலயத்துக்கும், மசூதிக்கும் அவர்கள் வழிபாட்டுக்கும் துளி அளவேனும் சிக்கல் இந்த ஆட்சியால் வந்ததாக தெரியவில்லை, இல்லவே இல்லை
அய்யய்யோ இனி இந்தியாவில் யாரும் வாழமுடியாது எல்லாம் பார்ப்பன அதிகாரம் அழிச்சாட்டியம், எல்லோரும் அகதியாய் கிளம்பவேண்டும் என்றார்கள்
ஒரு பயலும் கிளம்ப காணோம், இதனால் மறுபடியும் அமைதியானார்கள்
அய்யய்யோ கருப்புபண ஒழிப்பா? போச்சா இவர்கள் இப்படித்தான் நாட்டை கெடுத்துவிட்டார்கள், நள்ளிரவில் பணமதிப்பு இல்லாமல் செய்து தேசத்தை சரித்துவிட்டார்கள், எல்லார் பணமும் போச்சி, பொருளாதாரம் போச்சி என ஒப்பாரி வைத்தார்கள்
அய்யய்யோ இனி தொழிலதிபர் மட்டும் வாழ்வான், அம்பானி வாழ்வான் அவன் வாழ்வான் சூத்திரன் வாழமுடியாது என்றார்கள்
ஒன்றும் நடக்கவில்லை தேசம் அதன் போக்கில் இருந்தது, ஆனால் அதன் பின்புதான் பெரும் தொழிலதிப முதலைகள் எல்லாம் கண்ணியில் சிக்கின
இவர்களோ ஒன்றுமே அறியாதவர்கள் போல அடுத்த காரணம் தேடினர்
சூத்திரன் குடியரசு தலைவனானான் ,
அனில் அம்பானி மஞ்சள் கடிதம் கொடுக்கும் நிலைக்கு வந்தான்
இவர்கள் அந்த சத்தத்தை விட்டுவிட்டார்கள்
இனி யாரும் மருத்துவராக முடியாது, நாமெல்லாம் மருத்துவம் பார்க்க பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் செல்லவேண்டும் என்றார்கள், அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றதும் மாணவ சமூகம் நீட் தேர்வுக்கு ஒத்துழைப்பதையும் அறிந்து அமைதியானார்கள்
அய்யகோ இனி தமிழ் ஒழியும் இந்தி வாழும் சமஸ்கிருதம் வரும் என்றார்கள், தமிழ் அதன் போக்கில் இருக்கின்றது, விரும்பியவர் எல்லா மொழியும் கற்கின்றார்கள் என்றபின் சோகத்துடன் மறுபடியும் அமைதி
இவர்கள் மிரட்டிய எதுவும் நடக்கவில்லை என்றபின் நிரம்ப யோசித்தார்கள்
ரபேலில் ஊழல் ஊழல் என்றார்கள், ஆளாளுக்கு நூலகம் நிரம்பும் அளவுக்கு புத்தகமே எழுதினார்கள்
ஆனால் ஊழலின் துளி ஆதாரத்தையும் இவர்களால் சமர்பிக்கமுடியவில்லை, தேசம் இவர்களை பிடறியில் தள்ளி மறுபடியும் அவரிடமே ஆட்சியினை கொடுத்தது
அய்யய்யோ கும்பலுக்கு கொஞ்சநாள் ஒரு காரணமும் இல்லை பின் காஷ்மீரை பிடித்துகொண்டார்கள்
முதலில் அய்யய்யோ புல்வாமாவா? அய்யய்யோ பால்கோட் தாக்குதலா? போச்சா பாகிஸ்தான் விடுமா? வீணான யுத்த நாடகம் என்றார்கள்
பின் அமைதியானர்கள் அதன் பின் காஷ்மீர் கிடைத்தது
அய்யய்யோ காஷ்மீரா , தாங்குமா? இனி பாகிஸ்தான் பொங்கும் உலகம் திரளும் உலகபோரே உருவாகும் இந்தியா நாசமாகும், லஷ்கரும் ஹிஸ்புல்லும் சும்மா விடாது என்றெல்லாம் மிரட்டினார்கள்
ஒன்றும் நடக்கவில்லை
விஜய் மல்லையா நீரவ்மோடி தப்பினால் எப்படி தப்பலாம் என்பார்கள், தப்பும் முன்பே சிதம்பரத்தை பிடித்தால் எப்படி பிடிக்கலாம் என்பார்கள், வித்தியாசனமானவர்கள் அய்யய்யோ கோஷ்டிகள்
இப்பொழுது அய்யய்யோ கும்பல் ரிசர்வ் வங்கி முன்னால் சென்றுவிட்டது
அய்யய்யோ ரிசர்வ் வங்கி பணமெல்லாம் போச்சி இனி தேசம் நாசமாகும் என அதே ஒப்பாரி
அத்தோடு வேறு வாய்ப்பில்லாமல் பல்லை குத்திகொண்டு மரத்தடியில் ஒரு கை ஊன்றி படுத்து கொண்டார்கள்
உலகம் பேட்டரி காருக்கு மாறவும், அமெரிக்க சீன வர்த்தகமும் சில பாதிப்புகளை கொடுத்தன
அய்யய்யோ இனி எல்லோருக்கும் வேலை இல்லை, எல்லோரும் வேலையன்றி போகபோகின்றோம் என ஒப்பாரி வைத்தார்கள்
எவன் வேலையும் போனதாக தெரியவிலை, இதென்னடா வேலை இருக்கும் போல என தலையில் அடித்துகொண்டு குட்டிசுவரில் அமர்ந்து கொண்டார்கள்
ராமர்கோவில் இந்தியாவினையே எரிக்கும் , உலகமே திணறும் என்றெல்லாம் பிம்பம் காட்டினார்கள், தீர்ப்பு வந்ததும் தெரியவில்லை காலம் கடந்ததும் தெரியவில்லை என்பதால் தலைசுற்றி சோடா குடிக்க கிளம்பினார்கள்
வெங்காயம் விலை ஏறியதும் துள்ளி குதித்தார்கள், பிராமணன் வெங்காயம் சேர்க்கமாட்டான் அதனால் அவனுக்கு சூத்திரன் மேல் அக்கறை இல்லை என அழுதார்கள்
வெங்காய சிக்கலும் தீர்ந்தபின் எகிப்து மேல் மண் அள்ளி பொட்டுவிட்டு திண்ணைக்கு சென்றார்கள்
அரசு அடுத்து குடியுரிமை திருத்தம் கொண்டுவந்தது
அவ்வளவுதான் இந்தியா, இனி துண்டு துண்டாக உடையும் இனி தாங்காது இந்த கலவரம் அடங்காது என அதே குதிப்பு
அங்கே பெரிய விஷயம் ஒன்றுமில்லை, உண்மையில் அரசு எதிர்ப்பார்த்தை விட கலவர ஆட்டம் குறைவே
இதனால் சுமார் ஆயிரம் பேர் சாவார்கள் என நினைத்த கோஷ்டிக்கு ஏமாற்றம் மிஞ்சி, இந்த வடகிழக்கு பசங்களுக்கு மானமே இல்லையப்பா என சொல்லிவிட்டு மறுபடியும் டீ குடிக்க போய்விட்டார்கள்
இந்த தேசம் நாசமாக வேண்டும் என எதிர்ப்பார்ப்பதில்தான் அவர்களுக்கு எவ்வளவு ஆசை? அது நடக்கவில்லை எனும் பொழுது அடுத்த காரணத்தை தேடி பிடிப்பதில்தான் எவ்வளவு ஆனந்தம்?
இவர்கள் ஆசை எல்லாம் நிராசையானது போல இந்த ஆசையும் நடக்காது
இந்த அய்யய்யோ கோஷ்டிகள் அடுத்த காரணத்தை தேடட்டும்
இனி அவர்கள் தொடங்கும் முன் நாம் தொடங்கிவிடலாம்
“அய்யய்யோ..” இந்த கோஷ்டிகளா, இவனுக பாகிஸ்தான் சொல்வதை அப்படியே சொல்ற பயலுகளாச்சே…நாடு நல்லாருக்கிறதே இவனுகளுக்கு பிடிக்காதே..