இரும்புகரம் கொண்டு வெட்டிவிடலாம்

வங்கப்போர் முடிந்து இன்றோறு 48 வருடங்கள் ஆகின்றன, ஆனால் அது ஏற்படுத்திய விளைவு இப்பொழுதுதான் முடிந்திருகின்றது

வங்கப்போரை மிக மிக கவனமாக நடத்தினார் இந்திரா, அவர்கள் தனிநாடு ஆனால் மேற்கு வங்கமும் தனிநாடு கேட்குமா? அகதிகளாக வந்தவர்களை இம்மக்கள் ஏற்பார்களா? என வலுகவனமாக காய் நகர்த்தினார்

ஒரு கட்டத்தில் ராணுவ வெற்றி பெற்றபின் அரசியல் ஆட்டம் ஆரம்பித்தது, அதை ஆடியவர் முஜிபுர் ரகுமான்

ஆம், நாங்கள் அகதிகளாய் வர காரணமே உங்கள் தலையீடுதானே இனி எங்கள் மக்களுக்கு நீங்களே பொறுப்பு என்ற ரீதியில் இருந்தது அவர் அணுகுமுறை

இங்கு வந்த மக்களை திரும்பபெற அவர்கள் தயாராக இல்லை, சுமை குறைந்தது போன்றே உணர்ந்தார்கள்

அவர்களை திருப்பி அனுப்ப முயன்றால் திபெத் அகதிகளை காட்டி சிக்கலை உண்டு செய்தன கம்யூனிஸ்டுகள்

இந்திராவுக்கு இது பெரும் தலைவலியாயிற்று , வங்கதேசம் தன் கட்டுபாட்டில் இல்லை என்பதை உணர்ந்தே சிக்கிமினை அவசரமாக இந்தியாவோடு சேர்த்தார்

பின் நடந்த விளையாட்டில் முஜிபுர் ரகுமானும் காலி

இந்த கசப்பான அனுபவங்களையே ஈழவிவகாரத்தில் பொறுமையாக காட்டினார் இந்திரா, இங்காவது கிழக்கு மேற்கு வங்கத்தவருக்கு மத வேறுபாடு உண்டு

ஆனால் ஈழத்துக்கும் திராவிட தமிழகத்துக்கும் தொப்புள் முதல் ரிப்பன் தொடர்பு வரை உண்டல்லவா?

இந்திரா மிசா, அரசியல் தோல்வி , பஞ்சாப் என தொடர்ந்து சிக்கலை எதிர்கொண்டதால் வங்க அகதிகள் பற்றி வைத்திருந்த திட்டத்தை செயல்படுத்தாமலே போய்விட்டார்

அவர் மனதில் என்ன இருந்தது என்பதை இப்போதைய அமித்ஷா காலத்தில்தான் பார்த்துகொண்டிருக்கின்றோம்

அந்த நாசமாய் போன கல்கத்தா கம்யூனிஸ்டுகள் அந்த மேற்கு வங்கத்தையும் கெடுத்து தீரா சிக்கலையும் உருவாக்கிவிட்டார்கள்

அவர்களே பிரச்சினையின் மகா மூலம்.

இவை எல்லாம் 1974களிலே நடந்திருக்க வேண்டிய விஷயம், முளையிலே கிள்ளியிருக்கலாம்

வளரவிட்டு வெட்டினால் கொஞ்சம் சிரமம்தான், அதனால் என்ன இரும்புகரம் கொண்டு வெட்டிவிடலாம்