ஒரு பயலும் தயாராக இல்லை

சீனா தன் சொந்த தயாரிப்பான ஜே10 விமானம் விற்பனைக்கு தயார் என சொல்லிவிட்டது, அது அவர்களின் அதி நவீன விமானம், அமெரிக்க எப் 16க்கு சமம் என சொல்லிகொண்டது

“ஜே10 வேண்டுமா? வேண்டுமா..” ? என உலகெல்லாம் கூவி கூவி கத்தினாலும் வாங்க ஒரு பயலும் தயாராக இல்லை

சீனாவின் ஜே10 விமானத்தை பார்ப்போர் பேரீட்சம் பழ நினைவோடு சிரித்துகொண்டே நகர்கின்றார்கள்

“அடேய் அமெரிக்க விலையினை விட பாதிவிலைக்கு தாரேண்டா.. வாங்குங்கடா” என கத்தினாலும் ஒருவரும் சீண்டவில்லை

பாகிஸ்தான் தலையில் கட்டலாம் என்றால் அவர்கள் “அண்ணே வேண்டாம்ணே நம்ம உறவு ரொம்ப நாளைக்கு வரணும்னே” என ஓடிவிட்டது

ஆம் விஷயம் வேறு ஒன்றுமில்லை, சீன தயாரிப்பு என்றால் அதன் தரம் அப்படித்தான் இருக்கும் என்ற பிம்பம் உலகம் எல்லாம் ஏற்பட்டுவிட்டது

அதை உறுதிபடுத்துதல் போல இந்த ஜே10 விமானம் சோதனையிலே கீழே விழுந்து விமானியினை கொன்ற பெருமை வேறு உடையது