உண்மையில் குடியுரிமை சட்டம் யார் குடியினையும் கெடுக்கவில்லை
உண்மையில் குடியுரிமை சட்டம் யார் குடியினையும் கெடுக்கவில்லை, அச்சட்டம் அந்நிய மக்களை பார்த்து
சொல்வதெல்லாம் இதுதான்”ரேசன் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது நில உரிமைக்கான ஆவணம் அதுவுமில்லை என்றால் அரசு வழங்கும் குடியிருப்பு சான்றிதழ் என ஒன்றை காட்டிவிட்டு உங்கள் போக்கில் இந்த தேசத்தில் இருங்கள் ஒன்றும் சிக்கல் இல்லைஅதுவும் இல்லை என்றால் இருக்கும் அடிப்படை ஆவணங்களை கொடுத்து அடையாளம் பெற முயலுங்கள்அதுவும் இல்லை என்றால் நீதிமன்றத்தில் உங்கள் தரப்பு நியாயங்களை சொல்லுங்கள்இதற்கெல்லாம் காலமிருக்கின்றது, அவகாசமிருக்கின்றது. உடனே யாரையும் விரட்டபோவதுமில்லை கடலில் தள்ள போவதுமில்லைமாறாக மேற்கொண்டு சிக்கல் வராதவாறு தேசத்தை பாதுகாக்க சட்டம் இயற்றபட்டுள்ளது”இந்த வரிகளைத்தான் இந்திய சிறுபான்மையினருக்கே ஆபத்து , உலக முஸ்லீம்களுக்கே இந்திய அரசால் ஆபத்து என வரிந்து கட்டி போராட்டம் என குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கின்றது திமுகஇந்த கூட்டம் அப்படிபட்ட கூட்டம்நாளையே பழனிச்சாமி இந்த சட்டத்தை ஆதரிக்கின்றோம் என கூட்டம் திரட்டட்டும், இதை விட அதிக கூட்டம் வரும்அதே கூட்டம், அதே பிரியாணி அதே தலைக்கு ஐநூறு ரூபாய்ஆக ஒன்றுமே இல்லாத சட்ட திருத்தத்துக்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம், அவ்வளவு வறண்ட அரசியலுக்கு திமுக தள்ளபட்டிருக்கின்றதுசரி இந்த ஆர்பாட்டத்தால் என்ன ஆகும்?
ஒரு மண்ணாங்கட்டியும் ஆகாது, இந்த ஆர்ப்பாட்டத்தில் இருந்ததால் உள்ளாட்சி தேர்தலில் தோற்றோம் என இன்னும் இருவாரங்களில் சிரிக்காமல் சொல்வார்கள்