சிதறல்கள் 18/12/2019
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மம்தா 2வது நாள் பேரணி
அப்படியே நடந்து வங்கதேசம் செல்லவும், பின் இங்கு வரவே வேண்டாம்..
செல்லும் பொழுது தமிழக ஸ்டாலின் மற்றும் கேரள கம்யூனிஸ்டுகளை அழைத்துகொண்டு செல்லவும்
*****
இன்று குடியுரிமை சட்டம் தொடர்பாக திமுக அனைத்து கட்சியுடன் ஆலோசனை : செய்தி
நாளை இம்ரான்கான் தலமையில் அனைத்துலக நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடக்கலாம்
*****
பொள்ளாச்சி அருகே மாமியார் தலையில் கடித்த பெண், 6 தையல் போடபட்டது : செய்தி
மாமியார் மருமகள் சண்டையில் , ஆத்திரத்தில் மாமியார் மேல் பாய்ந்து, அவர் தலையினை பாலா படத்து ஹீரோவின் மண்டை போல ஆக்கிவிடும் நோக்கத்தில் கடித்து பிராண்டியிருக்கின்றார் மருமகள்
இதில் படுகாயமுற்ற மாமியாருக்கு 6 தையல் போடபட்டு வழக்காகியுள்ளது
ஆக புகையில விரிச்சா போச்சி, மருமக கடிச்சா போச்சி.