தங்கள் தாயகம் திரும்பும் பொழுது பிடிபட்டிருக்கின்றார்கள்

நேற்று அந்த செய்தியினை எத்தனைபேர் படித்தீர்களோ தெரியாது, இந்திய அகதிமுகாம் ஈழதமிழர் 7 பேர் இலங்கைக்கு படகில் செல்லும்பொழுது பிடிபட்டிருக்கின்றார்கள்

ஆம் , அவர்கள் தங்கள் தாயகம் திரும்பும் பொழுது பிடிபட்டிருக்கின்றார்கள். முறையான அனுமதி இன்றி அவர்கள் தப்பியது ஏன் என்றும்? எதற்காக சொல்லாமல் கொள்ளாமல் ஓடினார்கள் எனவும் விசாரணை நடக்கின்றது.

ஏன் அலறி அடித்து ஓடியிருக்கின்றார்கள்?

ஒருவேளை இனி திமுகவினர் தங்களுக்கு கழுத்தில் கத்தி வைத்து குடியுரிமையினை திணித்து இந்தியாவேல் அமரவைத்து , அதை காட்டி வாக்கு கேட்பார்கள் என அஞ்சியிருப்பார்களோ?

ஆக இங்கே அரசியல்வாதிகள் ஈழதமிழருக்கு குடியுரிமை கேட்கும் பொழுது “அய்யய்யோ நீங்க எங்களை வாழவச்சி கிழிச்சதெல்லாம் போதுமடா சாமி, உங்களுக்கு கோத்தபாயா பரவாயில்லை” என ஓடும் ஈழமக்கள் அதிகரிக்கின்றார்கள்.

4 ஆயிரம் பேர் கிளம்ப தயாராகிவிட்டனர், இதோ சிலர் அதை விட அவசரமாக ஓடுகின்றார்கள்

விஷயம் திமுக தலமைக்கு தெரிய வரும்பொழுது அவர் சும்மா இருப்பாரா? அதுவும் ஈழ சைவ இந்து தமிழர்கள் என்றால் விடுவாரா? அதனால் கோத்தபாயாவுக்கு கோரிக்கை வைப்பார்

ஆம் சீறி சொல்வார் “கோத்தபாய அரசு, ஈழ அகதி மற்றும் ஈழ‌ “வம்ச வாளி” தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்காவிட்டால் மாபெரும் போராட்டத்தை திமுக நடத்தும், வழக்குகளுக்கு திமுக அஞ்சாது”