“காவி சங்கி” ஆகிவிட்டார் ஷேக் ஹசீனா..

இந்தியாவில் நடக்கும் காட்சிகளை மிக சாதுர்யமாக எதிர்கொள்கின்றது வங்க தேசம். அங்கு அகதிகளாக இருக்கு மக்கள் எம் தேசத்தவர் என ஆதாரம் இருந்தால் நாங்கள் ஏற்றுகொள்கின்றோம் என்கின்றது அந்நாடு

இது ஒரு தேர்ந்த ராஜதந்திரம்

ஆம், இப்பொழுது சிக்கலில் இருக்கும் மக்களிடம் இந்தியர் எனும் அடையாளமில்லை அதனால் அவர்கள் இந்தியர் இல்லை என்கின்றது இந்தியா

வங்கதேசம் அதே பந்தை திருப்பி அடிக்கின்றது, ஆம் அவர்களிடம் வங்கதேசத்தவருக்கான அடையாளமும் இல்லை

இந்தியா இனி சாட்சிகளை எடுத்து வீசும், அதாவது வங்கபோர் அகதிகள் குடியிருப்பு முதல் ஏராளமான தரவுகள் இந்தியா பக்கமும் உண்டு

இந்தியாவும் வங்கதேசமும் மல்லுகட்ட தொடங்கிவிட்டன, எனினும் விஷயம் எளிது

1947ல் இருந்து முறையான நிர்வாகத்தை கொண்டது இந்தியா, 1971ல் இன்னும் அது தேறியிருந்தது

இதில் இந்திய அடிப்படை ஆதாரமில்லா மக்கள் வங்கத்தில் இருந்து வராமல் வானில் இருந்தா வருவார்கள்

வங்கதேசத்தின் அச்சத்திலும் ஒரு விஷயம் இருக்கின்றது , வங்கவாசிகள் என பர்மா ரொஹிங்கியாக்களை நம் தலையில் கட்டுவார்களோ எனும் அச்சம் அது

ஆம் அதற்கும் வாய்ப்பிருக்கின்றது

எப்படியோ தன் சில திட்டங்களால் வங்கதேசத்தை இறங்கிவர வைத்துவிட்டது இந்தியா, வங்கம் அதன் போக்கில் இல்லாமல் ஏன் இறங்கி வந்தது?

இதில்தான் இருக்கின்றது இந்தியாவின் ராஜதந்திர விளையாட்டு

கடந்த சில தினங்களாக இந்தியாவில் நடக்கும் கொந்தளிப்பை கண்ட பாஜக அரசு அழகான வியூகம் அமைத்தது

இங்கு மாயாவதி, ஸ்டாலின், காம்ரேடுகள் என எல்லாம் மோடிக்கு எதிராக அரசியல் செய்வதாக கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் ஆடிகொண்டிருக்க மோடி அரசு அதை நாட்டுக்கு சாதகமாக பயன்படுத்தியது

ஆம், உங்கள் மக்களால் எங்கள் நாட்டில் கொந்தளிப்பினை பார்த்தீர்களா? என தன் கவலையினை அது வங்கதேசத்திடம் தெரிவித்தது

வங்கமும் இந்தியாவே கொந்தளிக்கின்றதா? சரி வாருங்கள் பேசலாம் என இறங்கிவந்தாயிற்று

ஆக மோடியினை எதிர்ப்பதாக சொல்லி வங்கதேசத்தை இறங்கி வர வைத்திருக்கின்றன முக ஸ்டாலின் கோஷ்டி

எதிர்பாரா பின்விளைவு என்பது இதுதான்

வங்கதேசம் இப்படி இறங்கி வந்ததால் திமுக ,திரினாமுல் மற்றும் காங்கிரஸ் கோஷ்டிகள் கடும் அப்செட்டில் இருக்கின்றன‌

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்த கோத்தபாய போல் இல்லாமல் தன் மக்களை ஏற்றுகொள்கின்றோம் என சொன்னது இவர்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது

இதனால் இவர்களுக்கு கோத்தபாய நல்லவராகிவிட்டார், ஷேக் ஹசீனா வில்லியாகிவிட்டார்

இனி என்னாகும்?

இஸ்லாமிய விரோதி ஷேக் ஹசீனா ஒழிக, மோடியுடன் சமரசம் பேசிய இன துரோகி ஹசீனா ஓழிக என சொல்லியபடியே கொடும்பாவி எரிக்க கிளம்புவார்கள்

இனி இந்திய இஸ்லாமியரின் எதிரி ஷேக் ஹசீனா, திராவிட எதிரி ஷேக் ஹசீனா

ஆக அவர்கள் பாஷையில் “காவி சங்கி” ஆகிவிட்டார் ஷேக் ஹசீனா..