பிராமண எதிர்ப்பு கோஷம் எப்படி மங்கி இப்பொழுது திசைமாறுகின்றது பார்த்தீர்களா?

1950களில் திமுகவின் பிராமண எதிர்ப்பு கோஷம் எப்படி மங்கி இப்பொழுது திசைமாறுகின்றது பார்த்தீர்களா?

இது திமுகவின் இணைய பிரிவின் அதிகார பூர்வ பக்கம் என்பதால் இது திமுகவின் குரலே

பிராமணர் உண்மையானவர்கள், உழைப்பாளிகள், நேர்மையாளர்கள் அதனால்தான் ஆலயத்தில் முன்னிறுத்தபட்டார்கள் என திமுகவின் இணைய பிரிவே இதோ ஒப்புகொண்டாயிற்று

ஆக பிராமணர் ஏன் அர்ச்சகரானார்கள் , பிராமணர் ஏன் உயர்பதவியில் இருந்தார்கள் என்பதை காலமே சொல்லிற்று

ராம்சாமியும், அண்ணாவும், கருணாநிதியும் வீரமணியும் பொய் சொல்லியிருக்கலாம் என மறைமுகமாக ஒப்புகொண்டாயிற்று

பார்ப்பானுக்கு வியர்ர்குமா? தொப்பை இல்லாமல் இருக்குமா? ஏமாற்றி பிழைப்பது அவன் தொழில் என்ற திமுகவின் குரல்கள் திமுகவினராலே ஓடுக்கபடுகின்றன‌

பிராமண எதிர்ப்பு என்பது பொறாமையால் வந்தது என திமுகவினரே சொன்னபின் இனியும் வார்த்தை ஏது?

தெய்வத்தின் ஆட்டம் இது

ஆக வெற்று சித்தாந்தமும், வெறுப்பு அரசியலும், அர்த்தமே இல்லா வெறுப்புமான பிராமண எதிப்பினை திமுக கைவிட்டு பிராமணரிடம் சரணாகதி ஆகின்றது

அடுத்து பிராமணர் தாங்கி நிற்கும் இந்துமதத்திடமும் சரணாகதியாகும்

ஆம் பிராமணமும் இந்துமதமும் பிரிக்கமுடியாதவை, உடலும் ஆன்மாவும் போன்றவை

பிராமணர் அழிந்தால் இந்துமதம் அழியும் என்றுதான் திட்டமிட்டு கோடாரியுடன் அலைந்தனர், முடிந்தவரை வெட்டி பார்த்துவிட்டு, அதை வெட்ட முடியாமல் களைப்பில் அமர்ந்து தூங்கியே விட்டனர் பாவம்

அவர்கள் மேல் பரிதாபபட்ட கடவுள் வந்து ஞானகண்ணை திறந்துவிட்டு சென்றுவிட்டார்

கோடாரியினை வீசிவிட்டு இதோ சூடமும் சாம்பிராணியுமாக கிளம்பிவிட்டார்கள்

இருந்து பாருங்கள், இனி பிராமண அர்ச்சகருக்கு பல்லக்கு தூக்குவதில் இருந்து சாமியின் தேரை இழுப்பது வரை விரைவில் திமுகவினர் முன்னால் நிற்பார்கள்

வாக்கு அரசியல்தான் ஒவ்வொருவனையும் என்னபாடெல்லாம் படுத்துகின்றது

அதுவும் கிஷோர் பிரசாந்த் எனும் பிராமணன் வந்தபின் என்ன குட்டிகரணமெல்லாம் அடிக்க வேண்டி இருக்கின்றது

எதற்கும் நாமும் அப்துல்லாவிடம் இப்படி கேட்கலாம்

அய்யா பிராமணரிடம் இருந்து நல்ல விஷயம் எல்லாம் கற்க ஆசைபடும் நீங்கள், பிராமணரின் நல்ல விஷயங்களுக்கு அடிநாதமாய் ஆணிவேராய் இருக்கும் அவர்கள் கடவுள்களையும் மதத்தையும் கற்று ஏற்றுகொண்டால் என்ன?

வந்து முயற்சி செய்யுங்கள், கோவில் வாசல் உங்களுக்காய் திறந்தே இருக்கின்றது

வரும்பொழுது சர்வாதிகாரியினையும் அழைத்து வாருங்கள், போகும் பொழுது மகானாய் கூட்டி செல்லலாம்..”