இனி என்னாகும் தெரியுமா?

தென்காசி அருகே திருமணமான பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது , கணவன் சில மாதங்களுக்கு முன்புதான் அதாவது அப்பெண் கருவுற்ற பின்புதான் வெளிநாடு சென்றிருக்கின்றான்

இந்நிலையில் இக்குழந்தை தன் மகனின் குழந்தை அல்ல என மாமியார் அடாவடி செய்ய, கைகுழந்தையுடன் வாசலில் அமர்ந்துவிட்டாள் பெண், போலீஸ் வரை விவகாரம் சென்றாயிற்று

“நான் இக்குழந்தையின் டி.என்.ஏ டெஸ்டுக்கு ரெடியாக இருக்கின்றேன்.. உன் மகனை வரசொல் ” என பகிரங்கமாக சவால் விட ஆடிபோய் இருக்கின்றார் மாமியார்

இனி டி.என்.ஏ டெஸ்ட் நடக்கலாம்,

அப்பக்கம் நாம் தமிழர் தும்பிகள் இருந்தால் சில நிமிடங்களிலே சர்ட்டிபிக்கேட் கொடுப்பார்கள்

இனி என்னாகும் தெரியுமா?

தென் தமிழக கிழவிகளை நன்கு அறிந்ததால் சொல்கின்றோம், அந்த மாமியாருக்கு சில எதிர் கிழவிகள் கூட்டம் இருக்கும், நிச்சயம் இருக்கும்.

அவை இந்த மருமகளை வளைத்து இனி என்ன சொல்லிகொடுக்கும் தெரியுமா?

“எங்க வீட்டு புள்ளைய மாதிரியே இருக்குறிய தாயீ…முதலில் உன் கணவனுக்கு டி.என்.ஏ சோதனை செய்து பாரம்மா, அந்தம்மா அந்த காலத்துலே ஒரு மாதிரியாக்கும்…”