ராணுவம் ரசிக்கவில்லை

பாகிஸ்தானில் முஷாராபுக்கு தூக்கு தண்டனை கொடுத்ததை ராணுவம் ரசிக்கவில்லை

காரணம் அங்கு ராணுவம் திடீரென அடிக்கடி ஆட்சிக்கு வரும், இதனால் முஷாராப் போன்ற முடிவு தங்களுக்கும் வரலாம் என்பதால் தவிக்கின்றார்கள்

ராணுவம் முஷாராப்பினை எப்பாடு பட்டேனும் காக்க விரும்புகின்றது, இம்ரான்கானை அது மிரட்ட ஆரம்பித்துவிட்டது

இம்ரானை பிடித்து விரட்டிவிட்டு ராணுவம் ஆட்சிக்கு வந்தால் முஷாராப்பின் கழுத்து கயிறு நீக்கபடும்

பாட்சாவில் ஆனந்த ராஜ் அசால்ட்டாக சொல்வார் அல்லவா அப்படி “பாகிஸ்தான்ல மக்களுக்குன்னு ஒரு தனி சட்டம் இருக்குது சாமி, அது அப்படியே இருக்கட்டும் சாமி

இந்த ராணுவத்துக்கு தனி சட்டம் சாமி, அதுல யார் குறுக்க வந்தாலும் இருக்க மாட்டாங்க சாமி”

விஷயம் கடுமையாகின்றது, இம்ரானை சிக்கலில் இழுத்துவிட அனுமதியின்றி அது இந்தியாமேல் பாயும் ஆபத்தும் உண்டு என்பதால் இந்திய எல்லை கடும் கண்காணிப்பாகிவிட்டது

இம்ரான் என்னவெல்லாமோ செய்து பார்க்கின்றார், ஆனால் முஷாராப் விவகாரம் அவருக்கு பெரும் தலைவலியாகவே மாறிவிட்டது