சங்கத்தின் தன் புத்தாண்டு தீர்மானம்

சங்கத்து செயலாளர் Periya Samy அவர்களே,

சங்கம் தன் புத்தாண்டு தீர்மானமாக நமது அக்கால, முக்கால, எக்கால தலைவியுமான குஷ்புவினை அடுத்த தமிழக முதல்வராக அமர்த்திவிடுவது என இந்த புத்தாண்டில் சூளுரை தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது

சங்கம் ஏன் சில நாட்களாக புது தலைவிகளை தேடியது என்றால், மகாகவி பாரதி தமிழின் அருமை அறிய பல மொழிகள் கற்றானாம், சுவாமி விவேகானந்தர் இந்துமத பெருமை அறிய எல்லா மத நூல்களையும் வாசித்தாராம்

அப்படி பலமொழி கற்ற பாரதி அதன் பின்பே “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதானது ஒன்றையும் காணோம்” என உரக்க சொன்னான். பலமொழி கற்றதாலே அவனால் அப்படி சொல்லமுடிந்தது, அந்த தகுதியும் வந்தது

அப்படி நாமும் இனி உரக்க சொல்லலாம்

“யாமறிந்த தலைவிகளிலே குஷ்பு போல் இனிமையானவரை காணோம், காணவே முடியாது”

ஆக இனி அவரை முதல்வராக்க கடும் முயற்சியில் சங்கம் இறங்கிவிட்டது, முதலில் திருச்சியில் அவருக்கான கோவிலை திறந்திடல் வேண்டும்

#KhushbuNextCM

(செயலாளரே படத்தை பார்த்தீர்களா?

“ஒரு தேன் நிறைந்த‌ ஜாடி
தேநீர் குடிக்கின்றதே..

செங்கரும்பு தோட்டம்
செம்சீனி அருந்துகின்றதே ..

செஞ்சீன கோப்பையொன்று
கோப்பை ஏந்துகின்றதே..

அடடே… ” )