சீனாவுக்கு காலம் கடந்து ஞானம் வந்திருக்கின்றது

சீனா அமெரிக்காவுடன் வாணிப யுத்தம் நடந்தி இன்னும் முடிவுக்கு வராமல் அது இழுத்து கொண்டிருப்பதில் வாளை கீழே வைத்துவிட்டு ஓய்ந்து அமர்ந்துவிட்டது

நிச்சயம் அமெரிக்க பொருளாதாரமும் அது கட்டுபடுத்தும் உலக சந்தை பலமும் சாதாரணம் அல்ல, அதை எதிர்த்து நிற்கும் பலம் இப்போதைக்கு உலகில் ஒரு நாட்டிடமும் இல்லை என்பதுதான் நிஜம்

இதை நன்கு உணர்ந்துவிட்ட சீனா, இனி புத்தர்வழிக்கு திரும்புதல் நலமென கண்டுவிட்டது, புத்தவழி என்றால் அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்து ஒரு கூட்டணி வைத்து அமைதியாக அமெரிக்காவினை எதிர்ப்பது

தன்னை சுற்றி எல்லோருடனும் வம்பு வளர்த்திருக்கும் நாடு சீனா, இப்பொழுது அந்நிலையில் இருந்து மாறுகின்றது

“உலகம் சமநிலை பெறவேண்டும், உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்” என சீர்காழி பாடலை பாடியபடி அது கிளம்பிவிட்டது

அந்த தீடீர் ஞானோதயபடி ஜப்பானை நோறுக்குவோம் இரண்டாம் உலகபோருக்கு பழிவாங்குவோம் என சொல்லிகொண்டிருந்த சீனா இப்பொழுது ஜப்பானுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துவிட்டது

ஜப்பானுக்கு இது மகிழ்ச்சி என்றாலும் டிரம்ப் கண்ணை உருட்டுகின்றார், ஜப்பானோ அமைதிக்கு நாங்கள் என்றுமே திறந்த கதவோடு இருப்பவர்கள் என சொல்லிகொண்டிருக்கின்றது

இந்த “யாதும் ஊரே யாவரும் கேளீர்” திட்டத்தில் இந்தியாவினையும் இணைத்துவிட்டது சீனா, சீனாவின் ராணுவ அமைச்சகமே இந்தியாவுடன் இனி உரசல் இல்லை நாம் இணைந்து செயல்பட தயார் என்ற சாயலில் பேசியாயிற்று

நிச்சயம் இந்தியாவுக்கு இது சாதகமான நேரம்

இந்திய சீன உறவு மேம்படும் நிலையில் “அண்ணே , வேண்டாம்ணே நான் மருந்து குடிச்சி செத்துருவேம்ணே ” என சீனாவிடம் அழ தொடங்கிவிட்டது பாகிஸ்தான்

சீனாவோ ராமாயணத்து ராமனாக அவன் எனக்கும் மூன்றாம் தம்பி நீ நான்காம் தம்பி என தத்துவம் பேசிகொண்டிருக்கின்றது

ஆக சீனா அச்சுறுத்தல் இனி கொஞ்சகாலத்துக்கு இல்லை, இந்தியா எதிர்பார்த்ததும் இதுதான்

1950ல் இதனை சொன்னார் நேரு, நாம் ஆசியாவின் பெரிய நாடுகள் நமக்குள் ஒற்றுமையாய் இருந்தால் உலகை ஆளலாம் என்றார், சீனாவுக்கு ஐ.நாவில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அவர் வாங்கி கொடுத்தது இதனாலேயே

“இந்தோ சீனா பாய் பாய்” என முழங்கி நின்றார் அந்த பெருமகன், ஆனால் மாவோ முதுகில் குத்தினான்

இப்பொழுது சீனாவுக்கு காலம் கடந்து ஞானம் வந்திருக்கின்றது

இதை எல்லாம் கணித்துத்தான் மகாபலிபுரத்தில் ஜின்பெங்குடன் சேர்ந்து அமெரிக்காவுக்கு ஏதோ சொல்லியிருக்கின்றார் மோடி

வழக்கமாக மோடி இரண்டாம் இந்திரா என்றுதான் அழைக்கபட்டார் இன்றுமுதல் இரண்டாம் நேருவுமாகிவிட்டார்