ராணுவம் உஷார் படுத்தபட்டுள்ளது
தாவூத் இப்ராஹிம் போல பாகிஸ்தானுக்கு தப்பவிடாமல், மும்பை கோவை போல நெல்லையிலும் பெரும் தொடர் குண்டுவெடிப்பு நடக்கவிடாமால் தடுத்து அந்த தீவிரவாதி நெல்லை கண்ணனை கைது செய்துவிட்ட தமிழ்நாட்டு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்
நெல்லை கண்ணனுக்கும் கடந்தவருடம் கொழும்பில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உண்டா என இலங்கையும்
ஐஎஸ் இயக்க தலைவன் கொல்லபட்டதற்கு பழிவாங்க நெல்லை கண்ணன் கிளம்பினாரா என அமெரிக்க உளவுதுறையும் இந்திய அரசை கேட்டுகொண்டிருப்பதாக உறுதிபடுத்தபடா தகவல் வருகின்றது
எனினும் நெல்லை கண்ணன் எனும் பெரும் தீவிரவாதி கைது செய்யபட்ட நிலையில் காஷ்மீரில் பெரும் வன்முறை வெடிக்கலாம், ஆத்திரமுற்ற பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் ராணுவம் உஷார் படுத்தபட்டுள்ளது.