நெல்லை கண்ணன் ஏன் இப்படி சிக்கினார்?
மோடியின் 6 ஆண்டு காலத்தில் இல்லா சிக்கல் அவருக்கு குடியுரிமை போராட்டத்தில் வந்தது, அது ஏன் இதில்மட்டும் வந்தது?
நெல்லை கண்ணன் ஏன் இப்படி சிக்கினார்?
இதுபற்றி நாம் சிந்திக்கும் பொழுது காதோரம் ஒரு குரல் கேட்கின்றது, அது நித்தியானந்தா சீடகோடிகளின் குரல்
“ஏய் மானிடா,உன் ஆத்மாவுக்கு சொல்கின்றோம். மோடிஜி நல்லவர் ஆனால் சுவாமியினை பற்றி சிலர் தவறாக சொன்னதை நம்பி நடவடிக்கை எடுக்க தொடங்கி சிக்கலில் சிக்கினார்
உன் மானிட உடல்கூட்டின் மூளை பதிவில் அது பதிந்திருக்கின்றதா? சங்கம் வளர்த்த மதுரையில், மகனே உன் குஷ்பு சங்கம் அல்ல, தமிழங்கம் வளர்த்த மதுரையில் அன்னை மீனாட்சி நடத்தும் மதுரை ஆதீன வாரிசாக சுவாமி சிவனால் அடையாளம் காட்டபட்டு பதவிஏற்க வந்தபொழுது தடுத்தது யார் தெரியுமா?
இதே நெல்லை கண்ணன், கார்த்திகை மாத வைகையாக அவன் எப்படி எல்லாம் சீறினான் தெரியுமா?
அந்த நாளில் நாங்களெல்லாம் பிடிபட்ட அயிரை மீனாக எப்படி துடித்தோம் தெரியுமா?
அப்பொழுது விரட்டியது ஜெயா அரசு, அந்த ஜெயா இன்று இல்லை. அப்படியே சுவாமியினை விரட்டும் குஜராத், கன்னட அரசுக்கும், ஈக்வெடார் நாட்டுக்கும் எம்பெருமான் நாள் குறித்துவிட்டான்
இப்பொழுது பார், சுவாமியினை ஓட விரட்டிய அமித்ஷாவினை கொலை செய்ய திட்டமிட்டதாக நெல்லை கண்ணனே சிக்கிகொண்டான்
குடியுரிமை சிக்கலில் அமித்ஷாவும் கடந்து வரமுடியவில்லை
ஆனால் எம்பெருமானோ அவர்போக்கில் வீடியோ வெளியிட்டு மானிடம் உய்ய சித்தனாக சிவபெருமான் கட்டளையினை நிறைவேற்றி வருகின்றார்.
இது தேவரகசியம், மானிடருக்கு புரியாது, உன் மரமண்டைக்கும் புரியாது
ஆனால் உன் ஆத்மாவினை பிரபஞ்சத்தோடு இணைத்து பார், அந்த ஞானகண்ணுக்கு எல்லாம் புரியும்
நீ இந்துமதம் மேல் நல்ல அபிமானம் உள்ளவன் என்பதால் இந்த ரகசியம் உனக்கு கொஞ்சம் பகவான் திருவுளபடி வெளிக்காட்டபட்டது, அது உன் பூர்வ ஜென்ம கர்மா”
சொல்லிவிட்டு விடைபெற்றது குரல், அது புத்தாண்டு வாழ்த்து கூட சொல்லவில்லை
ஆத்மாவா? சரி அதை எங்கே தேடுவது, கண்ணை மூடி தேடிபார்ப்போம் என தேடினால் நித்திசாமி மந்தகாச புன்னகையில் சிரிக்கின்றார்

இனி ஆத்மாவினை தேடவே கூடாது.