பாகிஸ்தானில் சிறுபான்மையானரான சீக்கியர் மேல் தாக்குதல்கள் தொடர்கின்றன‌

பாகிஸ்தானில் சிறுபான்மையானரான சீக்கியர் மேல் தாக்குதல்கள் தொடர்கின்றன‌

முதலில் பாகிஸ்தானின் லாகூர் பக்கம் ஒரு சீக்கியரை காதல் விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் செய்ததில் தொடங்கிய சர்ச்சை கலவரமாகி குருத்வாராவினை தாக்கும் அளவு சென்றது

அந்த கலவரம் பரவி பாகிஸ்தானின் மேற்கு பக்கத்தில் பெஷாவரில் ஒரு சீக்கியன் கொல்லபட்டிருக்கின்றான்

இனி பெரும் கலவரம் வெடித்தால் என்னாகும்? அந்த சீக்கிய அபலைகள் எங்கு செல்லும்?

ஆப்கன் செல்லமுடியுமா? இல்லை ஈரானுக்கு ஓட முடியுமா?

நம் நாட்டிற்குள்தான் வரவேண்டும், சீக்கிய பூமி பஞ்சாப் தேடித்தான் ஓடிவர வேண்டும்

இதைத்தான் சட்டம் சிறுபான்மை இந்துக்களுக்கும் அனுமதிக்கின்றது

1947ல் இருந்தே இந்நாட்டு குடியுரிமை சட்டம் பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினருக்கு அதாவது இந்து, கிறிஸ்தவ, சீக்கிய , பார்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இங்கு வர வழிசெய்கின்றது

அதைத்தான் அமித்ஷாவின் குடியுரிமை திருத்த சட்டமசோதாவும் பின்பற்றுகின்றது