அதிமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி
அதிமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி
ராமசந்திரன் இறந்த பின்பே அடிக்கடி அதிமுகவில் உள்ளே வெளியே ஆடிகொண்டிருப்பர் கருப்பசாமி பாண்டியன்
அடிக்கடி திமுகவிற்கு வருவார் பின் ஓடிசென்று அதிமுகவில் சேர்வார், இரு கட்சிகளும் ஏன் போனார் என கேட்காது
காரணம் அவர் திரும்ப வருவார் என அவர்களுக்கே தெரியும். அப்படியே திரும்ப வரும்பொழுதும் தயக்கமில்லாமல் சேர்த்துகொள்வார்கள்,
இப்பொழுது அதிமுக சேர்ந்திருக்கின்றது
சில மாதங்களுக்கு முன்புதான் அவர் திமுகவில் இணைந்தார், பின்பு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்துவிட்டார்
ஓ அவரா விரைவில் வந்துவிடுவார் என கொஞ்சமும் அலட்டிகொள்ளாமல் இருக்கின்றது திமுக, இவரா? இந்தமுறை எத்தனை மாதம் இருப்பாரோ சரி செக் இன் செய்வோம் என சேர்த்து கொண்டது அதிமுக
இரு ஹோட்டல்களிலும் மாறி மாறி தங்கும் கருப்பசாமி பாண்டியன் இப்பொழுது அதிமுக ஹோட்டலில் ரூம் போட்டிருக்கின்றார் அவ்வளவுதான்