அமெரிக்க ராணுவத்துக்கும் அமெரிக்காவின் பென்டகனுக்கும் கடும் முரண்பாடு

ஈராக்கில் அமெரிக்க ராணுவத்துக்கும் அமெரிக்காவின் பென்டகனுக்கும் கடும் முரண்பாடு ஏற்பட்டாயிற்று

ஈராக்கில் இருந்து வெளியேறமாட்டோம், ஈராக்கிய அமைதிக்கு அமெரிக்கா நிறைய செலவு செய்துவிட்டது அதை தரும் வரை வெளியேறமாட்டோம் என ஈராக் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து அழிச்சாட்டியம் செய்தார் டிரம்ப்

அதற்கு அர்த்தம் ஈராக்கிய எண்ணெய் வயல்கள் எங்களுக்கே என்பது

இந்நிலையில் ஈராக்கிய அமெரிக்க தளபதி ஈராக்கிய அரசுக்கு தாங்கள் ஈராக்கை விட்டு வெளியேறுவதாக அறிவித்துவிட்டது

டிரம்ப் வெளியேற பணம் வேண்டும் என “நாடக போர்” நடத்திகொண்டிருந்த பொழுதே, ஈராக்கில் அமெரிக்க ராணுவம் இப்படி சொல்லிவிட்டது

டிரம்பை கை கால் வாயில் பிளாஸ்திரி போட்டு வெள்ளைமாளிகையில் அடைத்திருக்கின்றார்கள், மறக்காமல் விரலையும் கம்பியால் கட்டி வைத்திருகின்றார்கள் இல்லையேல் டிவிட் செய்துவிடுவார்

பெண்டகன் இக்கடிதம் போலி என்கின்றது, டிரம்ப் சத்தமில்லை, ஆனால் ஈராக்கிய அமெரிக்க பிரிவோ கடிதம் உண்மை என்பது போல மூட்டை முடிச்சுகளுடன் கிளம்புகின்றது

இந்நிலையில் இனி அணுசக்தி தொடர்பாக யாருக்கும் அடங்கமாட்டோம் என ஐரோப்பிய நாடுகளின் முகத்தில் அடித்துவிட்டு வெளிவருகின்றது ஈரான், சுலைமானி வஞ்சகமாக கொல்லபட்டதற்கு ஐரோப்பிய நாடுகள் காட்டும் அமைதி அந்நாட்டை ஆத்திரம் கொள்ள செய்துவிட்டது

அமெரிக்க படைகள் வெளியேறும் பட்சத்தில் ஈராக் லெபனான், சிரியா என இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் விதமாக அகண்ட ஈரான் அமைந்துவிடும் இது இஸ்ரேலுக்கு நல்லதல்ல‌

அத்துடன் ஈரானுக்கு அணுகுண்டும் வாய்க்குமானால் டெல் அவிவ் இருக்காது

அதேநேரம் சவுதிக்கும் குவைத்துக்கும் இன்னபிற சுல்தான்களுக்கும் நல்லதல்ல‌

விஷயம் எதை நோக்கியோ செல்கின்றது, ஈரான் நிச்சயம் பழிவாங்கும் ஆனால் எங்கே? யாரை எப்படி ஒழித்துகட்டி பழிவாங்க போகின்றது என்பதுதான் உலக பதற்றம்