ஈரானும் ஈராக்கும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவினை விரட்டுவது வரலாற்றின் திருப்பம்

உலகம் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது, ஈரானும் ஈராக்கும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவினை விரட்டுவது வரலாற்றின் திருப்பம்

டிரம்ப் முகத்தை மூடிகொண்டு உள்வீட்டில் ஒளிந்திருந்தாலும் கண்கள் சிவக்க உத்தரவுகளை பிறப்பிக்கின்றார்

இந்நேரம் பார்த்து ரஷ்ய கப்பல் சிரிய கடலோரம் வந்து அதன் போக்கில் நிற்கின்றது, “டேய் இங்க எதுக்குடா வந்தீங்க?, சொல்லுங்கடா” என அமெரிக்கா கத்தி கேட்டாலும் புட்டீன் போல கப்பலும் அமைதி

அதாவது நாங்கள் நிலமையினை கவனிக்கின்றோம் என்கின்றது ரஷ்யா

அணுசக்தி ஒப்பந்ததை ரத்து செய்துவிட்ட ஈரான் எந்நேரமும் தன் ஏவுகனையில் அணுகுண்டை பொருத்தலாம்

அமெரிக்க பிரிட்டன் போர்கப்பல்களும் நீர்மூழ்கிகளும் தயாராய் இருக்க, இஸ்ரேல் முழு விழிப்பில் இருக்கின்றது

உலகம் ஒவ்வொரு நொடியும் பெரும் பதற்றத்தில் இருக்க, தமிழனுக்கு நாளை ரஜினி படம் வருமாம் அப்படியே அவரின் மருமகன் டிரெய்லரும் வருமாம்

ஈராக் மேல் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் பறக்க, அவை எப்பொழுதும் வீழ்த்தபடலாம் அந்த நொடியில் போர் வெடிக்கலாம் என உலகம் அச்சத்தோடு ஹெலிகாப்டர்களை பார்க்க, இவர்களோ ஹெலிகாப்டரில் இருந்து ரஜினி படத்துக்கு மலர் தூவ போகின்றார்களாம்

தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவனுக்கொரு உலகம் உண்டு, அதில் ஹெலிகாப்டரும் உண்டு