ஆண்டவன் இருக்கான்

“நம்பகிட்ட ஜெயா ஒருவாட்டி தோத்துபோனாங்க, அய்யா கருணாநிதி ஒருவாட்டி பின்வாங்கினாரு

நம்மகிட்ட ஜெயிச்ச ஒரே ஆளு ராமதாஸ்தான், பாபா படபெட்டி விவகாரத்தை அடுத்து நாம இனி ராமதாஸ் ஜெயிச்சா அது பூர்வ ஜென்ம புண்ணியம்னு சொன்னோம், கடைசியில் அவருக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் அதிகம்ணு தெரிஞ்சி போச்ச்சி

இப்போ நம்ம தர்பார் படத்தோட ராமதாஸ் பேக்ரவுண்ட் திரவுபதி மோதவருது, அது பெரும் விவாதமாயிட்டு, நிச்சயமா டிரெய்லர் ஹிட்

ராமதாஸ் படத்துகிட்ட நம்மபடம் தோத்துருமோன்னு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு,

எல்லாம் இந்த ரஞ்சித்பயலுக்கு 2 படம் கொடுத்ததால வந்த வினை, ராமதாஸ் இடம் பார்த்து அடிக்குறாரு

அதுக்கென்ன, ஆண்டவன் இருக்கான், பாபாஜி இருக்கார், ராகவேந்திரர் இருக்கார், அய்யா மோடி இருக்கார், பழனிச்சாமிஜி இருக்கார்

இதுக்கும் மேல இந்தபடம் தோத்துட்டா அடுத்தபடத்துல குஷ்பு இருக்காங்க, அது போதும்

அவங்க இருந்தா நம்ம படம் தானா ஆயிரம் நாள் ஓடும், அவங்க ரசிகர் பலம் அப்படி”