அந்த ஆலயம் சாக்கடையாயிற்று

நிச்சயம் அந்த ஜேஎன்யூ கோவிலாக நினைத்துத்தான் கட்டபட்டது, அங்கு இந்நாட்டு மாணவர் படித்து பெரும் அறிவுடன் வந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்றுதான் கட்டபட்டது

பெரும் கோடிகணக்கான நிதி , மக்களின் பணம் அந்த நோக்கத்துக்காகவே செலவழிக்கபடுகின்றது

ஆனால் மாபெரும் ஆலயமாக இருந்து அறிவு தீபங்களை தந்து அந்த பல்கலைகழகம் நாட்டுக்கு வெளிச்சமேற்றும் என நினைத்தால் ஏமாற்றமே வந்துவிட்டது

அந்த ஆலயம் சாக்கடையாயிற்று, கொசுக்கள் உற்பத்தியாகின்றன‌

அந்த சாக்கடையில் பன்றிகளும் ஒரு சில நச்சு பாம்புகளும் புகுந்துவிட்டன, தேசத்தினை கெடுக்கும் நோய்களும் விஷ ஜந்துக்களும் அதிலிருந்து கிளம்ப ஆரம்பித்துவிட்டன‌

தேசவிரோத கட்சிகள் அந்த விஷ ஜந்துக்களை பட்டாம் பூச்சுகள் என வர்ணமடிக்கின்றன, அந்த சேற்று பன்றிகளுக்கு மான்கள் என பட்டம் சூட்டபடுகின்றது

விவகாரம் எல்லை மீறுகின்றது

இனி அந்த பலகலை கழகமே வேண்டாம், அங்கு ஒரு பயலுக்கும் படிக்கும் எண்ணமுமில்லை பட்டம் வாங்கி நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம் சேர்க்கும் திட்டமுமில்லை

ஒருவித கட்டணமில்லா பொழுது போக்கு மையமாக அதை பயன்படுத்த ஆரம்பித்து தேசவிரோத காரியங்களை செய்ய ஆரம்பித்தாயிற்று

இனியும் தாமதிக்காமல் அரசு அதை கைபற்றி ராணுவ வீரர்களுக்கான பாசறையாக மாற்றிவிடலாம்

தேசவிரோதிகளான இந்த பதர்களை விட தேசம் காக்கும் ராணுவத்தார் அங்கு தங்கட்டும்

உடனே மருந்தடித்து அந்த விஷ ஜந்துக்களை வெளியேற்றி அந்த சாக்கடையினை சுத்தம் செய்யவேண்டியது அரசின் கடமை

பொற்கோவில் நடவடிக்கை எடுத்த இந்திராவுக்கு வாக்கு வங்கி எங்கே சரிந்தது? நாடே வாழ்த்தியது

அந்த தீவிரவாதிகளுக்கு சற்றும் குறைவில்லா இக்கொடியவர்கள் அந்த வளாகத்திலிருந்து வெளயேற இரும்பு கரங்களை அரசு பயன்படுத்தட்டும்..