தமிழக அரசு மாவட்டங்களை பிரிக்கும் வேகம் சாதாரணமல்ல

தமிழக அரசு மாவட்டங்களை பிரிக்கும் வேகம் சாதாரணமல்ல, இது நிச்சயம் மாநில பிரிவினைக்கே வழிகோலும்

மாவட்டங்கள் மிகுந்துவிட்டன இனி மாநிலத்தை இரண்டாக பிரிப்பதே சரி என பிரிப்பார்கள்

சரி, எப்படி பிரிப்பார்கள் என்பதுதான் விஷயம்

வடக்கும் தெற்குமாக திருச்சி பக்கம் கோடு போட்டு அதாவது சென்னை உட்பட வட தமிழ்நாடும், திருச்சி உட்பட தென் தமிழ்நாடுமாக பிரிப்பார்களா? இல்லை மேற்கும் கிழக்குமாக கோவையினை தலைநகராக வைத்து மேற்கு தமிழ்நாடாகவும் சென்னையினை தலைநகராக கொண்டு கிழக்கு தமிழ்நாடாகவும் பிரிப்பார்களா என்பதுதான் கேள்வி

இப்படி பிரித்து போட்டால் இந்தியாவுக்கு என்னாகும் என்றால் ஒன்றும் ஆகாது

ஆனால் திமுகவும் அதிமுகவும் இரண்டாக உடையும், உடைந்தே தீரும்

அரசியலில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தும், பெரும் ஆபத்தாக சாதிரீதியான கட்சிகள் கை ஓங்கும் அங்கும் புதிய மாவட்டங்கள் அமையும் பின் அதுவும் உடையும்

ஒரு கட்டத்தில் சேர சோழ பாண்டியர் , கடை ஏழு வள்ளல்கள் காலம் போல ஏகபட்ட மாநிலங்களாக தமிழ்நாடு திகழலாம்..

மாநிலத்துக்கு பெரும் எச்சரிக்கை இது, ஆனால் கண்டுகொள்வார் யார்?

எல்லோரும் வங்கதேசத்தவன் குடியுரிமைக்கும் இன்னும் பலர் குடியுரிமைக்கும் கொடிபிடித்து கொண்டிருக்கின்றார்கள்