ஈரான் விவகாரத்தில் இரு தரப்பும் வரிந்து கட்டுகின்றது
ஈரான் விவகாரத்தில் இரு தரப்பும் வரிந்து கட்டுகின்றது, முதலில் சுலைமானியினை கொன்றது எப்படி தகவல் கொடுத்தது யார் என கடும் விசாரணையில் இருக்கின்றது ஈரான்.
மிக ரகசியமான அந்த சுலைமானியின் வருகை எப்படி கசிந்தது, தாக்க வந்த விமானம் எங்கிருந்து எங்கு இருந்து வந்தது என பல தகவல்களை அது எடுத்துவிட்டது
திமுகவில் வைகோ போல ஈராக்கிலும் ஒரு அமெரிக்க கைகூலி உண்டு என நம்பும் ஈரான் அவரை தேடுகின்றது, காரணம் தனி விமானத்தில் அல்லாமல் சரக்கு விமானத்தில் சாதாரணமாக சென்ற சுலைமானி தூக்கபட்டிருப்பது உள்ளே இருந்த வலுவான உளவாளி அன்றி சாத்தியமில்லை
சுலைமானியினை கொன்ற ட்ரோன் கத்தார் அமெரிக்க்க தளத்தில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றது
ஈரான் கடும் எச்சரிக்கையினை தொடுத்து கொண்டிருந்தாலும், பிப்ரவரி 11 ம்தேதி அதாவது ஈரானிய புரட்சி தொடங்கிய 40ம் ஆண்டு நினைவு நாளில் யுத்தம் தொடங்கும் என நினைக்கின்றது உலகம்
நிலமை இப்படி இருக்க அமெரிக்கா அதிசக்திவாய்ந்த பி52 ரக விமானத்தை களத்துக்கு அனுப்பியிருகின்றது, பி52 என்பது அதிவேக விமானம் அல்ல மாறாக அதிக சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை எடுத்து செல்லும் விமானம்
அமெரிக்க எப் 35 என்பது வேகமாக பறந்து வேகமான ஏவுகனைகளை வீசும் அது ஒரு கட்டடத்தை அழிக்கும்
ஆனால் பி52 என்பது ஊரையே அழிக்கும் அளவு பெரும் எடை குண்டுகள் பலவற்றை சுமந்து சென்று மொத்தமாக அழித்துவிடும்
இவ்வகை விமானம் எங்கும் பெரிதும் அமெரிக்கா பயன்படுத்தியதில்லை, காரணம் சேதம் அதிகம் என்பதால் தவிர்க்கும், ஈராக்கில் மட்டும் சிலமுறை சோதிக்கபட்டது
பெரும் அழிவினைகொடுக்கும் இந்த விமானத்தை அரபு தளங்களில் நிறுத்தினால் ஈரான் தாக்கி அழித்துவிடும் என்பதால் இலங்கை பக்கம் இருக்கும் டியோ கார்சியா தீவுக்கு அனுப்பிவிட்டது அமெரிக்கா
யுத்தம் என வந்தால் ஈரானில் 52 இடம் மட்டுமல்ல, புல் பூண்டு கூட இருக்க கூடாது என வெறியோடு வந்துவிட்டது தெரிகின்றது, அவர்கள் அப்படித்தான் காலம் தாழ்த்தி அடித்தாலும் அடி பலமாக இருக்கும் ஜப்பானுக்கு நடந்தது போல
இந்நிலையில் எங்களுக்கும் சுலைமானி கொலைக்கும் சம்பந்தமில்லை நாங்கள் ஏன் பதறவேண்டும் என வெளியில் சொல்லிவிட்ட்டு கடும் விழிப்பில் இருக்கின்றது ஈரான்
சண்டை வந்தால் நாமே சாகவேண்டும் என கையினை பிசைந்துகொண்டிருக்கும் சவுதி தன் தூதுவர்களை அங்கும் இங்குமாக அவசர கதியில் அனுப்பிகொண்டிருக்கின்றது
இந்நிலையில் டிரம்ப் மோடியினை அழைத்து ஏதோ பேசியிருக்கின்றார் என்னவென கேட்டால் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறினோம் என சிரிக்காமல் சொல்கின்றார்கள், ஈரான் மேல் தாக்குதல் நடத்தபட்டால் இந்திய நிலைப்பாடு எப்படி இருக்கும் என டிரம்ப் பல்ஸ் பார்த்திருக்கலாம்
இந்நிலையில் ஈராக்கின் அமெரிக்க இலக்குகள் மேல் ஈரான் ஏவுகனை தாக்குதலை தொடங்கியிருக்கின்றது, ஈரானில் இருந்து தாக்காமல் ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு போராளிகள் மூலம் சண்டையினை தொடங்கியிருக்கின்றார்கள்
பொறி கிளம்புகின்றது, அடுத்து என்ன என்பது விரைவில் தெரியும்

