ஈரான் ராணுவத்தார் அனைவரும் தீவிரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தது

ஈரான் ராணுவத்தார் அனைவரும் தீவிரவாதிகள் என அமெரிக்கா அறிவித்துவிட அரேபியாவில் இனி ஈரானிய ராணுவத்தார் சிரியாவிலோ ஈரானிலோ நின்றாலும் அமெரிக்கா கொல்லும் எனும் பரபரப்பு தொடங்கிவிட்டது

அமெரிக்காவும் நாங்கள் ஈரான் தீவிரவாதிகளை அல்ல , எந்த நாட்டு தீவிரவாதியினையும் கொல்வோம் என பகிரங்கமாக கொக்கரித்துவிட்டது

இது ஈரானோடு எல்லையினை பகிரும் பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது, தமிழக வறண்ட நிலத்தில் கற்றாழை போல, கானகத்தில் நெருஞ்சிமுள் போல அங்கு எங்கும் வியாபித்து நிற்பவர்கள் தீவிரவாதிகள்

பின்லேடனை போட்டது போல தன் நாட்டிலும் தாக்கலாம் சந்தடி சாக்கில் பாகிஸ்தான் ராணுவம் மேலும் அமெரிக்க அடி விழலாம் என அஞ்சும் பாகிஸ்தான் “எங்கள் நாட்டில் தீவிரவாதிகள் இல்லை, இல்லை ,இல்லவே இல்லை” என இரு நாட்களாக சொல்லிகொண்டே இருக்கின்றது

இனி பாருங்கள், பாகிஸ்தானில் சில அசம்பாவிதங்கள் நிகழும் அங்கு தீவிரவாதிகள் இருப்பது உலகுக்கே தெரியும், பாகிஸ்தான் திருடனுக்கு தேள் கொட்டியது போல் முழிக்கும்

அதை கொட்டபோகும் தேள் எது என உங்களுக்கே தெரியும் என்பதால் விட்டுவிடலாம்