ஈரான் அமெரிக்க விமான தளத்தை தாக்கியிருக்கிறது

ஈரான் 35 ஏவுகனைகளை வீசி ஈராக்கில் இருக்கும் அமெரிக்க விமான தளத்தை தாக்கியிருக்கின்றன‌

அங்கு அபு அல் அசாத் எனும் இடத்தில் இருந்த அமெரிக்க முகாம் தகர்க்கபட்டிருக்கின்றது, அது விமான படை தளம் என்பதால் விமானங்கள் பலத்த சேதத்துக்கு உட்பட்டிருக்கின்றன‌

இதை தாமே செய்தோம் என உரிமை கோரிவிட்டது ஈரான்

அமெரிக்க பெண்டகன் தாக்குதலை உறுதி செய்துகொண்டிருக்கும் பொழுதே அடுத்த விமானபடை தளமான எப்ரில் எனுமிடத்தை தாக்கிகொண்டிருக்கின்றது ஈரான்

ஈரானில் இருந்து நேரடியாக ஏவுகனைகள் கிளம்பிவிட்டதால் இனி அமெரிக்கா களத்தில் குதிக்கும்

ஆனால் நாங்கள் தாக்கியது ஈராக்கில் இருக்கும் அமெரிக்க முகாம்களையே, இது ஈராக் ஈரான் சிக்கல் என ஈரான் சொல்லிவிடும் அப்பொழுது காட்சிகள் மாறும்

ஆம் ஈராக்கிய அரசு உள்ளே வந்து எம் நாட்டு பாதுகாப்பு முக்கியம் நீங்கள் கிளம்புங்கள் என சொல்லும், சொன்னாலும் மற்ற நாட்டு தளங்களில் இருந்து அமெரிக்கா தாக்கலாம் அவை காலி செய்ய சொன்னால் பொருளாதார தடையினை விதித்துவிட்டு கப்பலில் இருந்து தாக்கும் அமெரிக்கா

எப்படியாயினும் போர்களம் தொடங்கியாயிற்று,

இனி அமெரிக்கா மாபெரும் 5ம் தலைமுறை யுத்தத்தின் சாம்பிளை நமக்கு காட்டும், உலகம் வாயினை பிளந்து பார்க்க போகின்றது

நாட்டாமை படத்து பொன்னம்பலம் போல “40 வருஷமா இதுக்குதாண்டா காத்துட்டு இருந்தேன்” என வெறியோடு தயாராகின்றது அமெரிக்கா

8கோடி பேரும் அது போக அண்டை நாட்டில் பெரும் ஷியாக்களின் எண்ணிக்கையும் கொண்ட ஈரானும் சும்மா விடாது