உண்மையில் வரலாறு சொல்வதென்ன?

பிராமணன் வந்தேறி அவன் மத்திய ஆசியாவில் இருந்து வந்தான் என்பது ஈரோட்டு ராம்சாமி தொடங்கி வைத்த வாதம்

உண்மையில் வரலாறு சொல்வதென்ன?

இந்த லெமூரியா, கபாடபுரம் போன்றவற்றை விடுங்கள் அப்படி ஒன்று இருந்ததாக அறிவியல் சொல்லவில்லை ஆனால் ஒரு பெரு நிலபரப்பு கடலில் மூழ்கி இப்பொழுது இருக்கும் நிலபரப்பில் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் நடந்திருக்கலாம்

அது ராமாயண காலத்துக்கும் முந்தையது,

ராமன் காலத்திலே இலங்கை தனி தீவாகத்தான் இருந்தது

மற்றபடி இளங்கோவடிகள் காட்டும் கடற்கோள் பூம்புகார் போல கன்னியாகுமரி அடுத்து இருந்து மூழ்கியிருக்கலாம்

சரி விஷயத்துக்கு வரலாம்

பிராமணன் மட்டுமா கைபர் போலன் அல்லது சிந்துநதி கடந்து வந்தான்?

மானிட தோற்றம் ஆப்ரிக்காவிலோ இல்லை மத்திய ஆசியாவிலோ உருவாகி அங்கிருந்தே மானிட இனம் பரவிற்று என்பது தியரி

ஆம் பொதுவான இடத்தில் இருந்து அது வளமான இடம் நோக்கி பெரும் ஆறுகள் இருக்கும் கரை நோக்கி நகர்ந்திருக்கின்றது

அப்படி சிந்துநதி கரையிலும் ஒரு இனம் இருந்திருக்கின்றது அதற்கு தமிழ் இனத்தின் சாயல் உண்டு

இன்றைய தமிழ் ஊர்களும் பிரசித்தி பெற்ற பெயர்களுமான கொற்கை, முசிறி, தொண்டி எல்லாம் பாகிஸ்தானிலும் உண்டு, இன்று பெயர் மருவி கிடக்கின்றது.

இந்த கோஷ்டிகள் செவிட்டில் அடிக்கும் பெரும் உதாரணம் ஒன்று உண்டு, அது ஆப்கனின் காவ்ரி எனும் கோரி

இங்கிருந்துதான் முகமது எனும் கோரி முகமது வந்தான்

அந்த கோரியின் உண்மைபெயர் காவ்ரி, காவ்ரி என்பது காவேரி என்பதன் திரிபே

இதற்கு மேல் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

ஆம் மானிட இனம் மேற்கில் இருந்தே சிந்து வழியாக தெற்கு நோக்கி நகர்ந்தது, அதில் தமிழனும் இருந்தான் வட இந்தியனும் இருந்தான் பிராமணனும் இருந்தான்

சிந்து நாகரீகம் தமிழர் நாகரீகம் என கருதபடுவது இதனாலே

பின் அங்கிருந்தும் தெற்கு நோக்கி நகர்ந்து ,

அதாவது வளமான ஆற்றங்கரையில் வாழ்வதும் பின் வெள்ளமோ இல்லை சண்டையோ வந்தபின் அடுத்த ஆற்றுகரைக்கு நகர்வதுமாய் அது பரவிற்று

இனி கடல் என்ற நிலையில் இங்கேயே தங்கிவிட்டது மானிட இனம்

(இதே நகர்வு பின் கப்பல் மூலமும் நடந்தது

ஒரிய இனத்தவர் மலேயாவினை அடைந்து சிங்கப்பூருக்கு சிங்கபுரம் என பெயர் வைத்ததும், இலங்கையில் விஜயனும் அவன் கோஷ்டியும் வந்து சிங்கள இனம் உருவாகியதும் இப்படியே

தமிழன் வட இலங்கையில் ஊடுருவி அங்கு திருநெல்வேலி நாகர்கோவில் கள்ளிகுளம் என ஊர் அமைத்து அதாவது தமிழக பெயரில் ஊர் அமைத்து வாழதொடங்கியதும் இப்படியே..)

ஆப்கனிலும் பாகிஸ்தானிலும் வழங்கபடும் பெயர்களை இங்கும் சூட்டி இங்கு வாழ ஆரம்பித்தது

அப்படியே கடவுள்களையும் இழுத்தது

அகத்தியரும் முருகனும் வடக்கே இருந்து வந்தது அப்படியே, விட்டுபோன தன் மக்களை தேடி வந்திருக்கலாம்

இன்னும் பெரும் உதாரணம் உண்டு, தொல்காப்பியர் தன் புத்தகத்தில் ஒட்டகத்தையும் அதன் கன்றையும் சொல்கின்றார்

தமிழ்நாட்டில் தமிழன் ஆதிகாலம் தொட்டே இருந்தால் தொல்காப்பியர் ஒட்டகத்தை எங்கு பார்த்திருப்பார்?

ஆக வேறு எங்கோ இருந்து வந்தததுதான் மொத்த தமிழினமும் , பிராமணனும் அப்படி அவர்களோடு வந்தவனே

இதோ இன்று அமெரிக்கா ஆஸ்திரேலியா என செல்வது போல தமிழகத்துக்கு பல குழுக்கள் எங்கிருந்தோ வந்து சேர்ந்தன‌

ஆக எல்லா பயலும் வந்தேறியாக இருக்க, தமிழ்முனி அகத்தியனும் தமிழ்கடவுள் முருகனுமே வந்தேறியாக இருக்க , பிராமணன் மட்டும் வந்தேறி நாங்களெல்லாம் மண்ணின் மைந்தர், கல் தோன்றி கள் தோன்றி என புலம்புவதெல்லாம் சுத்த மடத்தனமும் அரசியலுமாகும்