இலங்கையில் யாழ்பாணத்தில் உதய தாரகை பத்திரிகை
இலங்கையில் யாழ்பாணத்தில் உதய தாரகை பத்திரிகை 1876லே ஆரம்பிக்கபட்டதது சமீபத்தில் நினைவு கூறபட்டது.
அது அக்காலத்திலே தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்திருக்கின்றது
இலங்கையின் வடபகுதி அதாவது ஈழத்தில் எக்காலமும் சாதிபாகுபாடு உண்டு, தமிழ்நாட்டை விட அங்கு மோசமான கொடிய சாதிவெறியும் தடையும் இருந்தது
ஆனால் ஈழதமிழர் தமிழக தமிழரை விட 200 ஆண்டுகாலம் முன்னிலையில் இருந்தனர், கல்வியிலும் ஐரோப்பிய தொடர்பிலும் தமிழக தமிழரைவிட அவர்கள் மகா முன்னேற்றம்
அன்றும் அப்படித்தான் இன்றும் அப்படித்தான்
இன்றளவும் தமிழின் மிக சிறந்த அறிவாளிகளை பிராமண சமூகத்துக்கு அடுத்து ஈழதமிழரைத்தான் கைகாட்ட முடியும்
இதுபற்றி நாம் முன்பு ஒரு ஈழதமிழரிடம் கேட்டோம், “எங்கள் நாட்டில் பெரியார் என்றொருவர் வந்துதான் எங்களை எல்லாம் படிக்க வைத்தார், உங்கள் நாட்டில் எந்த கரியார் வந்து படிக்க வைத்தார்?
எப்படி இவ்வளவு முன்னேற்றம், அதுவும் சாதிவெறி பிடித்த மண்ணில் இருந்து இப்படி ஒரு சமூகம் உருவாக முடிந்தது?”
அவர் தெளிவாக சொன்னார்
“அய்யா வெள்ளையன் வந்த காலத்திலே நவீன கல்வி தொடங்கிற்று, அவன் உலகெல்லாம் தொழில் செய்த காலத்தில் ஆங்கிலமும் கொஞ்சம் அடிப்படை கல்வியும் இல்லா மக்கள் இல்லமால் தன் சாம்ராஜ்யம் அமைக்க முடியாது என கருதினான்,காரணம் அவனுக்கு இருந்தது மிக சிறிய மக்கள் தொகை
இதனால் மற்ற காலணி நாடுகளில் கல்வி கொடுத்து தனக்கு தேவையானவர்களை உருவாக்க எண்ணி கிறிஸ்தவ கல்வி நிறுவணங்களுக்கு அனுமதி கொடுத்தான்
அதில் மதமாற்றமும் நடந்தது, எங்களவர் முருக பக்த சைவர்கள் அல்லவா? கொஞ்சமும் தாமதிக்க்காமல் இந்து கல்லூரிகளும் பள்ளிகளும் பெருகின
இன்னொன்று நாம் ஆங்கிலேயரிடம் படித்தாலும் சைவராய் இருந்தோம் இன்றுவரை இருக்கின்றோம், இதனாலே உலகில் எங்கு சென்றாலும் தனித்துவமாய் வாழ்கின்றோம்
தமிழும் சைவமும் இரண்டற கலந்தது , ஒன்று இல்லாவிடில் இன்னொன்று வாழாது
எங்கள் நாட்டில் சாதி உண்டு, எக்காலமும் உண்டு ஆனால் அதை வைத்து அரசியலும் செய்யவில்லை. சாதி உண்டு என்பதற்காக கடவுள் இல்லை என நாங்கள் கிளம்பவுமில்லை
தமிழை விரும்பினோம், சைவத்தை நம்பினோம், கடவுளை தொழுதோம், கல்வி பெற்றோம் வாழ்ந்தோம், வாழ்வோம்”
நாமும் கேட்டோம் “அய்யா தமிழனுக்கு மதமில்லை, தமிழன் காட்டுமிராண்டி, தமிழனுக்கு எல்லாம் பார்ப்பான் ஏமாற்று தந்திரம் மூலம் கொடுமை செய்தான் என்பதெல்லாம்..”
அவர் சொன்னார்
“அய்யா தமிழனுக்கு மதமில்லை என எவனாவது சொல்லமுடியுமா? இனத்தின் அடையாளமே மதம்
தமிழன் சைவ மதமாகவே எக்காலமும் எல்லா இடத்திலும் இருந்தான் எங்கள் பூமி போல
ஒரு தலைவனுக்கு சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு தகுதி வேண்டும், அந்த பெரியார் என்பவர் அவ்வளவாக படிக்கவில்லை, கடவுளை நோக்கும் அறிவும் அவருக்கு இல்லை
சமஸ்கிருதம் தெரியாமலே சமஸ்கிருதத்தை விமர்சித்திருக்கின்றார், தமிழ் இலக்க்கியம் படிக்காமலே அதையும் கிழித்து போட்டிருக்கின்றார்
ஒருமாதிரி அறிவுகெட்ட மனிதராக இருந்திருகின்றார், எங்கள் நாடென்றால் அன்றே பிடித்து கட்டி வைத்து அடித்து திருத்தியிருப்போம், உங்கள் நாட்டில் அவரை தலைவராய் வைத்து நாசமானீர்கள்
இப்பொழுது சைமன் என்றொருவர் இருக்கின்றார் அல்லவா? அந்த காமெடியினை அன்றே செய்தவர் உங்கள் ஊர் பெரியார்
ஒன்று சிந்தியுங்கள், இட ஒதுக்கீடு சாதி ஒழிப்பு எல்லாம் பெரியார் சுதந்திர இந்தியாவில் பேச தொடங்கவில்லை மாறாக பிரிட்டிஷ் இந்தியாவிலே தொடங்கினார்
ஆனால் பிரிட்டன் அரசிடம் என்றாவது இட ஒதுக்கீடு கேட்டாரா? தாழ்த்தபட்ட சாதிக்கு வேலைகொடு என கேட்டாரா?
அதிகாரமும் ஆட்சியும் பிரிட்டனிடம் இருந்தபொழுது அவனிடம் கைகட்டி நின்ற பிராமணன் வீட்டு முன்னால் நீயே எதிரி என குட்டிகரணம் அடித்தது கோமாளிதனம் இல்லையா
அதிகாரம் பிரிட்டிஷ்காரனிடம் இருக்க சக வேலைக்காரனான பிராமணனை போட்டு இவர் விரட்டியது உங்களுக்கே பெரும் காமெடியாக இல்லை, அந்த ஆள் செய்ததெல்லாம் மனநலம் பாதித்தவன் செய்தது
ஆனால் ஒன்றை நான் சொல்கின்றேன், செழிப்பான இலங்கையினை அனாரிகா தர்மபாலா எனும் படித்த சிங்கள டாக்டரை கொண்டு அதாவது அவனின் அபரிமிதமான பக்தியினை கொண்டு சிங்களரிடம் வெறியேற்றி இங்கு குழப்பத்தை ஏற்படுத்தினான் பிரிட்டானியன்
உங்கள் நாட்டில் படிப்பே வராத கடவுள் நம்பிக்கை இல்லா ராமசாமி கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தினான்
இரு நாடுகளும் நாசமானது இப்படித்தான்..”
1841 உதயதாரகை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து வாராந்தம் ஒவ்வொரு வெள்ளி கிழமையிலும் வெளியானது. 1841 இல் இதன் முதல் இதழ் வெளியானது. கிறிஸ்தவ வார இதழாக வெளியான இந்த பத்திரிகை ஈழத்தின் முதலாவது தமிழ் பத்திரிகை யாக காணப்படுகிறது. செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம் , அறிவியல், மருத்துவம் என பல்துறை சார்ந்த விடயங்களையும் தாங்கி இந்த இதழ் நீண்ட காலமாக வெளியானது. தமிழிலும் ஆங்கிலத்திலும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது. இதன் முதல் ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர்.