ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி

ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவும் நிலையில் மனிதனின் குடிநீரை குடித்து தட்டுபாட்டை உருவாக்குவதாக 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல முடிவெடுத்திருக்கின்றது ஆஸ்திரேலியா

அது பணக்க்கார நாடுதான், கடல்நீரை குடிநீராக்கி கூட அவற்றை வாழவைக்கலாம் ஆனால் அவர்கள்விரும்பவில்லை

முன்பே ஒட்டகங்களை துடைதொழிக்க விரும்பின, அரபு நாடுகளும் இன்னும் சில புளுகிராசும் கிளம்பியதால் கிடப்பில் போட்டது

இப்பொழுது வறட்சி என காரணம் காட்டி கிளம்பிவிட்டார்கள்

பட்டினி கிடந்தாலும் தன் வீட்டு நாய்க்கும் பூனைக்கும் சோறை பகிர்ந்தளிப்பது நம் மரபு, எல்லா உயிரிலும் இறைவனை காணுவதும் அதை காப்பதும் நம் பண்பாடு

காக்கை குருவி எங்கள் சாதி என பாடிய பாரதி அதைத்தான் சொன்னான்

ஆனால் நீரெல்லாம் தனக்கே என சக உயிரையும் கொல்ல துணிவது மேற்கத்திய மரபு, அவர்களின் கலாச்சாரமே அதுதான்

தமிழ்நாட்டில் காளைகளை வதைக்கின்றார்கள் என கிளம்பிய பீட்டா கோஷ்டியினை 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்லும்பொழுது காணவே இல்லை

இந்தியாவில் ஜல்லிகட்டுக்கு தடை கேட்ட அந்த பீட்டா கோஷ்டியினை பிய்ந்த செருப்புடன் தேடிகொண்டிருக்கின்றேன்