தர்பார் படத்தின் கதை வேறொன்றுமில்லை
தர்பார் படத்தின் கதை வேறொன்றுமில்லை
வரதராஜ முதலியார் எனும் வர்தாபாயின் மும்பை சாம்ராஜியத்தை அசைத்து புடுங்கி போட்டவன் ஒய்.சி. பவார் எனும் இளம் காவல்துறை அதிகாரி
வரதராஜ முதலியாரின் தந்திரமும் அடாவடியும் அவனிடம் எடுபடவில்லை, ஒரு கட்டத்தில் பவார் முதலியாரை சுற்றி வளைக்க, ஒரு மூதாட்டி முதலியாருக்காக தன்னை கொளுத்திகொண்டு சாகும் பொழுதுதான் உண்மை புரிந்தது
பவார் இனி வரதராஜ முதலியாரை சட்டத்தால் ஒன்றும் செய்யமுடியாது என உணர்ந்து பல்வேறு தொடர்பு மற்றும் அழுத்தம் மூலம் சென்னைக்கு மாற்றினார்
பவாருக்கும் வரதராஜ முதலியாருக்கும் நடந்த சண்டை மகா விஷேஷம் , பவார் வரதராஜ முதலியாரின் குறியில் தப்புவதும் திருப்பி அடிப்பதும், பவார் விடாது துரத்தியதும் சாகச காட்சிகள்.
நிச்சயம் பவார் வந்திராவிட்டால் முதலியார் சென்னைக்கு திரும்பியிருக்க மாட்டார், மஸ்தானும் அவனின் தொடர்ச்சியாக தாவூத்தும் வந்திருக்கமுடியாது
சரி, முதலியாரை ஓட விரட்டிய பவரால் ஏன் மஸ்தானை கட்டுபடுத்தமுடியவில்லை என்றால் அதுதான் மும்பை அரசியல், தமிழன் மராட்டியன் அரசியல் இன்னபிற..
அதை விட்டுவிடலாம்
பவாரின் பாத்திரத்தைத்தான் தன் நாயகன் படத்தில் நாசர் பாத்திரமாக வைத்திருந்தார் மணி ரத்னம்
தர்பார் என வந்திருப்பது, நாயகன் படத்தில் இருந்தும் வரதராஜ முதலியார் வாழ்வில் இருந்தும் உருவபட்ட கதை
மற்றபடி முருகதாஸுக்கு என்றைக்கு சொந்த சரக்கு இருந்தது?
(நாம் தமிழருக்கு இந்த விஷயம் இன்னும் தெரியாது , தெரிந்தால் வீர தமிழன் வரதராஜ முதலியாரை விரட்டிய மராட்டியனின் கதையில் நடித்திருக்கும் மராட்டிய ரஜினி படத்தை பார்க்காதே என கிளம்பிவிடுவார்கள்..)

