காவலரை சுட்டுகொன்றுவிட்டு தப்பியிருக்கின்றார்கள் இருவர்
கன்னியாகுமரி அருகே வாகன சோதனையில் வாகனத்தை நிறுத்த முயன்ற காவலரை சுட்டுகொன்றுவிட்டு தப்பியிருக்கின்றார்கள் இருவர்
அவர்கள் இஸ்லாமிய சமூக இளைஞர்கள் என்பது விசாரணையில் தெரிகின்றது
நாம் இதை மத கண்ணோட்டதுடன் பார்க்கவில்லை , ஆனால் போலிசிடம் சிக்காமல் இருக்க அவரை சுட்டுகொல்லும் அளவு இவர்கள் பதற்றபட்டது ஏன்?
அந்த துப்பாக்கி இவர்களுக்கு எப்படி கிடைத்தது?
ஆங்காங்கே ஐ.என்.ஏ பெரும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் நடமாடும் தீவிரவாதிகளை அமுக்கும்பொழுது இங்கே துப்பாக்கியுடன் ஒரு கும்பல் காவலரையே சுட்டிருப்பது ஏன்?
இது சாதாரணமாக கடக்கும் விஷயமல்ல
1990களில் இப்படித்தான் புலிகள் பலரை சுட்டனர், சிவராசன் கூட ஒரு காவலரை சுட்டு கொன்றான்
அதன் கடும் விலைதான் பின்பு ராஜிவின் உயிர் போனது
இது எதுவுமே சரியாக படவில்லை, கன்னியாகுமரி பலநாட்டு மக்களும் எல்லா மாநில இந்தியரும் வந்து செல்லும் பகுதி, அருகில் அணுவுலையும் மகேந்திர கிரி தளமும் உள்ளது
தெற்கே கடல்மூலம் யாரும் ஊடுருவும் வாய்ப்பும் உள்ளது
விஷயம் எதையோ குறிப்பாக சொல்கின்றது, உயிர்கொடுத்து எச்சரித்த காவல் தெய்வத்துக்கு வீரவணக்கம், அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் களமிறங்க வேண்டிய நேரமிது
தமிழக அரசு மட்டுமல்ல, கேரள பிணராயி விஜயனும் மோடி அரசை விட்டுவிட்டு தன் மாநில பாதுகாவலை பார்க்கட்டும்
