ஈரானில் உக்ரைனிய விமானம் வீழ்ந்ததில் அரசியல் ஆரம்பாயிற்று

ஈரானில் உக்ரைனிய விமானம் வீழ்ந்ததில் அரசியல் ஆரம்பாயிற்று

அது விழும் பொழுதே, அதாவது ஈரானின் விமான நிலையம் அருகே அது 180 பயணிகளோடே விழுந்தபொழுது பெரும் சர்ச்சையாயிற்று ஆனால் அந்த நேரம் ஈரான் அமெரிக்க முகாம்களை தாக்கிகொண்டிருந்ததால் சிக்கல் இல்லை

இப்பொழுது அதை வீழ்த்தியது அமெரிக்காவா ஈரானா என்ற சர்ச்சை வெடிக்கின்றது

ஏதோ நடந்திருக்கின்றது, ஈரான் அமெரிக்க முகாம்களை தாக்கிய நேரம் தங்கள் வான்வெளியினை பலபடுத்தியிருக்கலாம் அதில் ஏதும் எதிர்பாரா விஷயம் நடந்திருக்கலாம் என்பது ஒரு தியரி

ஈரான் ஏவுகனைகளை வீசும்பொழுது அந்த விமானம் போர் விமானம் என நினைத்து அமெரிக்கா ஏதும் செய்து தொலைத்தது என்பது அடுத்த தியரி

எப்படியும் அந்த விபத்து சந்தேகத்திற்குரியதே

இப்பொழுது விமான கருப்பு பெட்டியினை ஒப்படைக்க ஈரான் மறுக்கின்றது, அய்யோ அப்படியானால் அவனே கொலைகாரன் என ஒப்பாரி வைக்க தொடங்கிவிட்டது அமெரிக்கா

விஷயம் சிக்கலாகின்றது, இது சில வருடங்களுக்கு முன் உக்ரைனில் மலேஷிய விமானம் எம்.எச் 18 தாக்கபட்டு 200க்கு மேற்பட்டோர் உயிரிழந்தார்கள், இந்த விஷயம் அப்படித்தான் நகர்கின்றது