வரலாற்றை எழுதுபவர்கள் மிக சிலரே
தமிழக இஸ்லாமிய எழுத்தாளர்கள் மேல் எப்பொழுதும் ஒரு வருத்தம் உண்டு
வரலாற்றை எழுதுபவர்கள் மிக சிலரே, இஸ்லாமியரில் அப்படி வரலாறு எழுதுபவர்கள் மிக குறைவு
வரலாறு என்றால் இந்த மொகலாயர், ஆற்காடு நவாப் கதைகள் அல்ல, உலகில் இரு பெரும் இஸ்லாமிய பேரரசுகள் வரலாற்றில் உண்டு
ஒன்று முகமது நபிகள் நாயகத்துக்கு பின்னரான கலீபாக்களின் ராஜ்யம் அது ஈரானில் இருந்து ஆபிரிக்கா ஊடாக ஸ்பெயின் வரை பரவியிருந்தது, மிக மிக வலுவான சாம்ராஜ்யம் அது, ஐரொப்பியரை அலற விட்ட சாம்ராஜ்யம் அது
அந்த கலீபாக்களின் ஆட்சி மகா நியாயமாகவும் முகமதுநபிகளின் போதனையினை பின்பற்றிய சொர்க்கபூமியாகவும் இருந்திருக்கின்றது
அது பின்பு சிதறி ஷியா சன்னி என என்னவோ ஆயிற்று
அதன் பின் அதன் தொடர்ச்சியாக எழும்பியது ஆட்டோமன் துருக்கியர்
வரலாற்றில் அவர்களின் சாதனை பெரிது, வீரமும் ஒரு மாதிரியான அசைக்க முடியா நிலைதன்மையும் பெரும் வரலாறு
கிட்டதட்ட ஐநூறு ஆண்டுகள் அது நின்றிருக்கின்றது
கிழக்கே வெல்லவேண்டும் கிறிஸ்துவம் கீழ்நாட்டு தேசமெல்லாம் பரவ வேண்டும், கடல்வழி இல்லா அக்காலத்தில் துருக்கு வழியாக ஆசியாவில் புகுந்து அரசியல் செய்யவேண்டும் என திட்டமிட்ட போப்பாண்டவர் கோஷ்டியினை அதுதான் விரட்டிற்று
ஜெருசலேமுக்கு நடந்த போர்கள் என அந்த சிலுவை போர்களை சொன்னாலும் உண்மையில் இருந்தது ஆதிக்க அரசியலே
போப்பாண்டவரை விரட்டி நெப்போலியனை விரட்டி அடித்ததும் துருக்கியரெ, ஐநூறு ஆண்டுகள் அவர்கள் சாம்ராஜ்யம் நீடித்து முதல் உலகப்போரை ஒட்டித்தான் முடிந்தது
துருக்கியர் வலுவாக இல்லாமல் இருந்தால் நெப்போலியன் தயக்கமின்றி இந்தியா வரை வந்திருப்பான்
துருக்கியரை வெல்லமுடியாது என கருதியதால் அவன் ஐரோப்பாவுக்குள் மட்டும் சண்டையிட்டு ரவுடியிசம் காட்டிகொண்டிருந்தான்
கலீபாக்களும் துருக்கியர்களும் பெரும் வரலாறு
ஆனால் அவர்களை பற்றி இங்கு ஒரு புத்தகமும் வராது, தமிழக இஸ்லாமிய எழுத்தாளர்களுக்கு வேலையே மோடி ஒழிக, உதயநிதி வாழ்க என்றானபின் அதையெல்லாம் எதிர்ப்பார்ப்பதும் நியாயமுமில்லை