சூரியனை ஏன் வணங்க வேண்டும்?
“சூரியன் இயற்கையானது அதன் கடமையினை அது செய்கின்றது அதை ஏன் வணங்க வேண்டும்?
மஞ்சளின் நிறமே மஞ்சள், கரும்பின் சுவையே இனிப்பு இதெல்லாம் இயற்கை, இதனை ஏன் இலையில் வைக்க வேண்டும்? இதெல்லாம் மூட நம்பிக்கை
நெல் விதைத்தால் அது முளைக்கும் 3 மாதத்தில் அறுவடையாகும், இது இயற்கை, இதில் என்ன பொங்கல் வேண்டியிருகின்றது, வெங்காயம்
சூரியன் முன்னால் பொங்கல் வைத்தால்தான் பொங்குமா? ஏன் இரவில் வைத்தால் பொங்காதா? இதெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும்
மாட்டுக்கு அறிவே கிடையாது , அது சொன்ன வேலையினை செய்யும், அதற்கு ஏன் மாலை அணிவித்து வண்ணமடித்து வணங்க வேண்டும்
சூரியனையும் மாட்டையும் வணங்குவதுதான் பகுத்தறிவா? இந்த சமூக இழிவும் மூட நம்பிக்கையும் களையபட வேண்டாமா?
இன்று டிராக்டர் உழுகின்றது அதை ஏன் வணங்கவில்லை, அறிவுள்ள தமிழன் என்றால் டிராக்டருக்கு மரியாதை செய்து, டிராக்டர் பிடி விளையாட்டு ஆடி டிராக்டரைத்தானே அடக்கி விளையாட வேண்டும்? ஏன் மாடுபிடி விளையாட்டு”
இப்படி எல்லாம் ஒரு திராவிட பகுத்தறிவாளனாவது கேள்வி கேட்பான் என பார்த்தால் கேட்கவே இல்லை, பகுத்தறிவே இல்லாமல் ராம்சாமி சொன்ன மூட நம்பிக்கையினையே இன்னும் பின்பற்றும் கோஷ்டி போலிருக்கின்றது.