சீனர்களின் மிகபெரிய கொண்டாட்டம் அதுதான்

இன்னும் 10 நாளில் சீனர்களுக்கு புத்தாண்டு. உலகெல்லாம் இருக்கும் சீனர்களின் மிகபெரிய கொண்டாட்டம் அதுதான்

கிட்டதட்ட 10 நாட்கள் கொண்டாடுவார்கள், மொத்த வருட உழைப்பையும் ஒரே மாதத்தில் தீர்ப்பது போல் பிரமாண்டமாய் கொண்டாடுவார்கள்

அது ஒரு அமாவாசையில்தான் தொடங்கும், சீனரின் காலண்டர் நிலாவினை மையமாக கொண்டது என்பதால் அது அப்படித்தான் தொடங்குகின்றது

இன்னும் கூர்ந்து நோக்கினால் பொங்கல் பண்டிகைக்கும் அவர்களின் புத்தாண்டு பண்டிகைக்கும் ஏகபட்ட ஒற்றுமைகளை காணமுடியும்,
பச்சரிசி பொங்கல் மட்டும் இராது

மற்றபடி கூடி கிடந்து கொண்டாடுதல், கனி தரிசனம், உறவுகளை நோக்குதல் பொங்கல்படி போன்ற அன்பளிப்புகள் எல்லாம் ஒன்றே

நமக்கு போகி போல அவர்களுக்கும் சில பழையன கழிதல் சடங்கு உண்டு

இங்கே ஜல்லிகட்டு போல அங்கு சிங்க நடனம். அந்த உருவம் ஒன்றும் விசிதிரம் அல்ல இந்து ஆலயங்களில் யாளி என இருக்கும் சிலை அதுதான்

சீன மாண்டரின் மொழியில் தமிழ் சொற்களும் நிரம்ப இருக்கின்றன‌

இன்றும் சீனபுத்தாண்டு அன்று விளக்கு வைத்து வரவேற்பார்கள், தென்னகத்தாரின் அந்த தொடர்ச்சி சபரிமலையில் மட்டும் ஜோதியாய் தெரிகின்றது, மகர ஜோதி என்பது அதுவே

இங்கு மஞ்சள் அன்று வீடெங்கும் தெருவெங்கும் நிறமாகும், சீனர்களுக்கு அன்று சிகப்பு நிற தினம்.

என்றோ ஒரு காலத்தில் இரு இனங்களும் ஒரே சமயத்தில் ஒரு பண்டிகையினை கொண்டாடியிருக்கின்றன‌

இன்று அது அவர்களுக்கு சீன புத்தாண்டாய் மாறிற்று தென்னிந்திய மக்களுக்கு பொங்கல் மகரசங்கராந்தி என மாறிற்று

காலங்கள் மாறிவிட்டாலும் இரு இனமுமே அதை தொடர்ந்து வருகின்றது