இந்தியாவில் பரபரப்பு காட்சிகள் ஆரம்பமாகின்றன‌

இந்தியாவில் பரபரப்பு காட்சிகள் ஆரம்பமாகின்றன‌

மத்திய அரசு ஒரு முடிவோடு களத்தில் நிற்கின்றது, ஆம் அமித்ஷாவின் சில அறிவிப்புகள் அசாத்தியமானவை. பாகிஸ்தானில் இருந்து வரும் சிறுபான்மையினருக்கு
இந்நாட்டு குடியுரிமை உண்டு என அடித்து சொல்கின்றார்

இந்திய வெளியுறவு துறை ஜனவரி 10 முதல் குடியுரிமைசட்டம் அமலுக்கு வந்தாயிற்று என வங்கதேசம், பர்மா , இலங்கை , ஐ.நா அகதிகள் வாரியம் என எல்லா இடமும் சொல்லியாயிற்று

இத்தோடு விட்டார்களா என்றால் இல்லை, அடுத்த காட்சிக்கு புள்ளி வைக்கின்றார்கள்

அதாவது இந்தியர் அல்லாதோர் வெளியேறுங்கள் என சொல்வதன் இன்னொரு அர்த்தம் இந்தியாவுக்கு சொந்தமான நிலபரப்பினை விட்டு கொடுக்கமாட்டோம் என்பதாகும்

ராணுவ துணைதளபதி மிக நிதானமாக “இந்திய பாராளுமன்றம் உத்தரவிட்டால் நாம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயார்” என்கின்றது

ஆம், பாகிஸ்தான் இக்காலம் வரை அந்த காஷ்மீர் தங்கள்நாட்டு பகுதி என சொல்லவில்லை மாறாக சுதந்திர காஷ்மீர் என உலகுக்கு சொல்லிவிட்டு உள்ளே அமர்ந்திருக்கின்றது

இப்பொழுது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகிவிட்ட நிலையில் அந்த காஷ்மீரும் இந்திய பகுதியாகின்றது

அந்த காஷ்மீரை பாகிஸ்தான் சுதந்திர காஷ்மீர் என சொல்லுமே தவிர உலக நாடுகள் காஷ்மீரின் தொடர்ச்சியாக பார்க்கின்றன , அதுவும் இந்திய பகுதியே

நடக்கும் காட்சிகள் செல்லும் திசையினை கண்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க இந்திய ராணுவம் முழு தயாராய் இருக்கின்றது, அரசிடமும் சில திட்டங்கள் இருக்கலாம்

இந்த அரசு யாரின் எதிர்ப்பையும் கண்டுகொள்வதாக தெரியவில்லை, ஒரு தீர்க்கமான முடிவில் இருக்கின்றார்கள்

ஆக விரைவில் திமுகவும் அதன் அடிப்பொடிகளும் சுதந்திர பாகிஸ்தானை ஆக்கிரமிக்காதே என கத்தும் காட்சி அரங்கேற‌ இருக்கின்றது

அப்பக்கம் இம்ரான்கான் கத்த இப்பக்கம் அவர்களின் பங்காளிகள் கத்தும் காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது