யார் கேட்க சொன்னார் ஸ்டாலினா?
என்னது? பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் தேவையா? அரசுக்கு வீண் செலவா? யார் கேட்க சொன்னார் ஸ்டாலினா?
அட டாஸ்மாக்கை திறந்து வைத்தால் 500ரூபாய் உடனே வந்துவிடும், திரையரங்கை திறந்து வைத்தால் அரசுக்கு வரியாக அதே பணம் வந்துவிடும், இதனால் அரசுக்கு நஷ்டமே இல்லை
ஆயிரம் ரூபாயோடு குடிக்க வருபவன் கையில் இருக்கும் இன்னொரு ஆயிரத்தையும் அரசுக்கு வைத்துவிட்டு செல்வான், அவனை நம்பி ஆயிரம் ரூபாய் என்ன? ஐந்தாயிரமும் கொடுக்கலாம்
அரசு பணத்தை மக்களுக்கு கொடுத்து அதை அரசுக்கே திருப்பி நாங்களெல்லாம் நல்ல பெயர் மற்றும் சைடு கமிஷனில் சம்பாதிக்கும் தந்திரம்
இதெல்லாம் எங்களுக்கு சொல்லிதந்தது கருணாநிதி என்பவரை தவிர வேறு யார்?”
