போகி பண்டிகை சொல்லும் தத்துவம்
பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது மார்கழியின் கடைசி நாள் போகி கொண்டாடபடும்
அக்கால தமிழன் முழுக்க இந்துவாய் இருந்தான், அது இந்துக்களின் சமய நம்பிக்கை விழாவாகவே அது கொண்டாடபட்டது.
இந்துமதம் அறிவியலும் ஆன்மீகம் கலந்தது என நாம் அறிவோம், அப்படி போகி பண்டிகையிலும் ஏராளமான தத்துவமும் மருத்துவமும் உண்டு
மறுநாள் பண்டிகையெனில் முதல் நாள் வீட்டை சுத்தம் செய்தல் இந்துக்கள் மரபு , “அன்பே சிவம்” என்று மட்டுமல்ல “‘சுத்தத்வாத் சிவம் உச்யதே’ என்கிறது வேதம்.
அதாவது சுத்தமே சிவம்.
போகி என்றால் அதை பல அர்த்தத்தில் சொல்லமுடியும், இந்துமதமும் அதை சொல்லிற்று எனினும் அதன் பொருள் ஒன்றே. அதாவது பழையன கழிந்து புதியன பெறுதல்
தைபொங்கலுக்கு சீதேவி நம் வீட்டுக்கு வருவாள் அதற்கு முந்தைய நாளில் மூதேவியினை அனுப்பிவிட வேண்டும், அழுக்கும் பழைய பொருட்களும் இருக்குமிடத்தில் மூதேவி இருப்பாள், சுத்தமான இடத்தில் இருக்கமாட்டாள்ம், மூதேவியினை போக்கும் நாளே போகி என்றார்கள்
உண்மையில் சுத்தம் இருக்குமிடத்தில் செல்வம் இருக்கும், கூடவே அதை அனுபவிக்க அமைதியும் இருக்கும் மேல்நாடுகளிலும் சில கிழக்காசிய நாடுகளில் அதை கண்கூடாக காணலாம்
சுத்தம் அவ்வளவு முக்கியமானது, இது ஆன்மீகம் என்றால் ஆன்மீகம், உளவியல் என்றால் சுத்தமான இடத்தில் மனம் புத்துணர்ச்சி கொள்கின்றது தெளிவாகின்றது, தெளிந்த சிந்தனை வெற்றியினை கொடுக்கின்றது என்பது
இதைத்தான் அன்றே தத்துவரீதியாக சொல்லி வைத்தது இந்துமதம்
ஏன் எரிக்க சொன்னார்கள், இந்து தத்துவம் அதுதான் குப்பை மேடு என ஒன்றை உருவாக்க அந்த அறிவார்ந்த சமூகம் விரும்பவில்லை. குப்பைகளை உரமாக்கு முடியாதவற்றை சாம்பலாக்கி மண்ணோடு கலந்துவிடு என சொன்னது உயிர்நீங்கிய கூடு உட்பட
போகிக்கு இன்னொரு காரணம் இந்திரன், அவனின் பெயரே போகி, அதாவது போகங்கள் எனும் இன்பத்தை கொடுப்பவன் அதன் அதிபதி, தை பிறந்து செல்வம் கொழிக்க போகின்றது அதன் அடிப்படையின் மழைக்கு காரணமான இந்திரனை நினைப்பதும் இந்நாளே
இந்திரனுக்கு நன்றி செலுத்தி அக்காலத்தில் ஒரு யாகம் செய்வார்கள், அதில் பல பொருட்களை கலந்து எரிப்பார்கள், அக்காலத்தில் அப்படி எல்லாம் வழக்கம் இருந்திருக்கின்றது
கண்ணனை சோதிக்க இந்திரன் மழைபொழிந்ததும், கண்ணன் கோவர்த்தன மலையினை தூக்கி மக்களை காத்து இந்திரனின் கர்வம் அடக்கியதும் இந்நாளே என்பார்கள்
இன்றும் கிராமங்களில் பொங்கல் கலாச்சார புண்ணாக்கு எல்லாம் அல்ல, அது ஒரு ஊர் விழா, கோவில் விழா
அன்று வீட்டில் காப்பு கட்டுவார்கள், வேப்பிலை ஆவாரை கருந்துளசி இலை எல்லாம் கலந்து காப்புகட்டி வாசலில் தொங்கவிடுவார்கள்
இந்துமதம் முன்னோர் வழிபாட்டை வலியுறுத்தும் மதம் என்பதால் பித்ருவழிபாடும் உண்டு, குடும்பத்தில் மரித்த கன்னி பெண்களுக்கு சேலை வளையல் எல்லாம் வைத்து வழிபடுவார்கள்,
மறுநாள் அவர்கள் வந்து ஆசீர்வதிக்க அழைக்கின்றார்களாம்
ஏன் இந்த வழக்கத்தை வைத்தார்கள்?
அங்கேதான் இருக்கின்றது நன்றிகடன், அந்த வயல்களும் கழனிகளும் முன்னோர்களால் உருவாக்கபட்டவை அல்லவா?, அவர்களுக்கும் அதில் உழைத்த எல்லோருக்கும் நன்றி கூறும் நிகழ்வு
வீடுகளின் முன்னோர் வழிபாடும் படையலும் நடைபெறும் குலதெய்வத்துகான பூஜை உண்டு வாசல் நிலைகதவில் மஞ்சள் குங்குமம் சாற்றி தெய்வங்களை வரவேற்பார்கள்
வாசலில் அந்த காப்பு கட்டுகின்றார்களே ஏன்? அது சமயம் என்றால் அம்பாள் என்றால் அம்பாள், தெய்வம் என்றால் தெய்வம்
அதன் மகா முக்கிய தத்துவம் பண்டிகைக்கு பலர் வீடுகளுக்கு வருவார்கள் நாமும் செல்வோம் அப்பொழுது நோய் தடுக்கும் கிருமி நாசினியாக இந்த வேப்பிலையும் ஆவாரையும் கருந்துளசியும் கட்டாக காவல் இருந்தன
நிச்சயம் பொங்கல் என்பது அறுவடை பண்டிகைதான், ஆனால் அறுத்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் கொண்டாடி தீர்க்கும் வெற்றுபண்டிகை அல்ல, அதன் ஆழமும் தத்துவமும் அழுத்தமானது
உலகில் ஜப்பான் முதல் யூத இனம் வரை எல்லோருக்கும் அறுவடை திருவிழா உண்டு, எல்லாமே ஒரு தெய்வத்தை நோக்கி நன்றி செலுத்தித்தான் கொண்டாடபடும்
எல்லா இனமும் இங்கு வாழ உணவு அவசியம், உணவுக்கு வேளான்மை முக்கியம். அந்த விளைச்சலை கொடுப்பது தெய்வம் என அதற்கு நன்றி சொன்னார்கள்
யூத இனம் அதை ஜஹோவா என்ற தெய்வத்துக்கு சொல்லிற்று , பஞ்சாபிய இனம் பைசாகி என சொல்லி பண்டைய தெய்வங்களுக்கு இந்து தெய்வங்களுக்கு சொன்னது குருநாணக் காலத்தில் மாறிற்று
ஜப்பானிய இனம் சிறுதெய்வங்களுக்கு சொன்னது, புத்த மதம் அதை குழப்பிற்று எனினும் இன்றும் அந்த வழிபாடு அறுவடைநாளில் உண்டு, போர்னியோ மக்கள் “காவாய்” என கொண்டாடுவார்கள் அங்கும் சிறுதெய்வ வழிபாடு உண்டு
மதம் இல்லா இனம் என உலகில் எதுவுமே இல்லை. மதம் அவர்களின் அடையாளமும் கலாச்சாரமும் அங்கீகாரமும் அறிவின் அடையாளமாய் இருந்தது
தமிழன் இந்துவாய் இருந்ததால் அவனும் தெய்வதுக்கு நன்றி சொல்ல கொண்டாடினான், நிச்சயம் மறுநாள் சூரியன் உட்பட எல்லா சக்திகளுக்கும் மறுநாள் மாட்டுக்கும் நன்றி சொல்லி கொண்டாட அவன் முடிவெடுத்தான்
அதற்கு முதல்நாளில் விளைச்சலுக்கு காரணமான மழையின் அதிபதி இந்திரனுக்கு நன்றி சொன்னான், யாகம் செய்து நன்றி சொன்னான்
தன் வயலை உருவாக்கிய முன்னோர்களுக்கு பித்ருவழிபாடு என நன்றி சொன்னான், பழையதை எரித்து சுத்தபடுத்தி தன்னை புதுபித்து கொண்டான்
எவ்வளவு அழகான ஏற்பாடு? எவ்வளவு அழகான விழாக்கால தொடக்கம்?
ஒரு பண்டிகையில்தான்உளவியல், நன்றிகடன், தத்துவம், ஆன்மீகம், அறிவியல், பக்தி என எவ்வளவு விஷயங்கள்?
ஒரே ஒரு பண்டிகையில் சுற்றுபுறத்தை சுத்தமாக்கி, முன்னோர்களுக்கு நன்றி தெரிவித்து, கிருமி நாசினி விஷயங்களை செய்து ஆரோக்கியத்தை பலபடுத்தி, மழை என்பது கடவுள் அருள்வது என அவனுக்கு நன்றி சொல்ல வைத்து, பழையதை எரித்துவிடு சாம்பல் உரமாகும் என அதிலும் விவசாய அனுகூலத்தை சொல்லி எவ்வளவு உன்னதமான ஏற்பாட்டை செய்தனர் முன்னோர்
ஏன் இந்த மதம் காலமெல்லாம் நிலைத்திருக்கின்றது என்றால் இதனால்தான்
அந்த முன்னோர் இந்துவாய் இருந்தனர், அந்த பரந்த மனப்பான்மையில் சிந்தித்தே இப்படிபட்ட அதி உன்னத ஏற்பாடுகளை அவர்களால் செய்யமுடிந்தது
ஒரு நல்ல இந்துவாய் உங்களை உணருங்கள், உங்கள் மனம் விசாலபடும் , பெரும் நற் சிந்தனை உருவாகும்
அந்த சிந்தனையில் அக்காட்சியினை கொண்டுவரலாம், ஞானம் பிறக்கும்
அக்கால இந்திரனுக்கு போகி நாளில் யாகம் செலுத்தும்பொழுது பல பொருட்களை இடும் பொழுது நம்முடைய அகங்காரம், கோபம், கவுரவம் இன்னும் பல கெட்ட விஷயங்களையும் அக்னி எரிக்க வேண்டும் என பிரார்த்திப்பார்களாம்
ஆம் கோவர்த்த மலையினை தூக்கி இந்திரனின் கர்வத்தை அடக்கினான் கிருஷ்ணன், அன்றே இந்திரனின் அகங்காரம் அழிந்ததாம்..
ஒவ்வொரு மனிதனும் அந்த அகங்காரத்தை பொசுக்க வேண்டிய நாள் இது
ஆம் இந்த அழகான பூமி மனிதனால் வந்ததல்ல, பருவம் தவறாமல் வரும் மழையும், என்ன விதைத்தாலும் அள்ளி கொடுக்கும் பூமியும் அவன் உருவாக்கியது அல்ல
விவசாயத்து பயன்படும் மரமும் மாடும் இன்ன பிறவும் எதுவும் மனிதனால் உருவாக்கபட்டது அல்ல, அதன் மூலம் இங்கேயே பரம்பொருளால் உருவாக்கபட்டது
மனிதன் என்பவன் இவற்றை எல்லாம் பயன்படுத்த உரிமை பெற்றிருக்கின்றான், மற்ற உயிர்களுக்கு இல்லா விஷேஷ ஞானம் அவனுக்கு வழங்கபட்டிருக்கின்றது
எல்லா உயிர்களும் மனிதனுக்கு ஒவ்வொரு வடிவில் உதவிகொண்டே இருக்கின்றன, கண்ணுக்கு தெரிந்து சில கண்ணுக்கு தெரியாமல் பல
நிலா வருவதும் இன்னும் பல வானியல் அதிசயங்களும் மேகமும் மழையும் மானிடன் இங்கு வாழவே
இந்த பெரும் பிரமாண்டத்தை நினைக்க நினைக்க மனித மனம் ஒடுங்கும், ஆம் ஏன் மனிதனுக்கு இவ்வளவு வசதிகளை கொடுத்தான் பரம்பொருள்
மானிடன் ஒவ்வொரு நிலையிலும் தன்னை உணர்ந்து முழு ஞானம் அடைந்து அவன் தன்னிடம் திரும்பிவரவேண்டும் என்பதற்காக..
போகியும் பொங்கலும் அதை நினைத்து பார்க்க வேண்டிய நாள், சூரியன் சந்திரன் மேகம் மழை நிலம் காற்று சக உயிர்கள் இன்னும் பஞ்சபூதமாய் நிலைத்திருக்கும் அந்த பரம்பொருள் தான் இந்த பூமியில் வாழ வரமருளிய நன்றிக்கு அவனை நினைத்து பார்க்கும் நாள்
பண்டைய தமிழன் அதை ஆத்மார்த்தமாக செய்தான், அதை போகியில் நன்றியாக தொடங்கினான்
“ஏ பரம்பொருளே, விளைந்து கிடக்கும் நெல்லும் கரும்பும் மஞ்சளும் என் உழைப்பால் வந்ததல்ல, நான் அதற்கு சொந்தக்காரனும் அலல்
மழை கொடுத்தவன் நீ, நிலம் படைத்தவன் நீ, விதை படைத்தவன் நீ, காற்றும் ஒளியும் கொடுத்தவன் நீ, உழைக்க என்னை படைத்தவனும் நீ..
என்னால் ஆனது ஒன்றுமே இல்லை
என்னை படைத்து என் பசிபோக்க சகலத்தையும் படைத்து என்னிடம் கொடுத்தாய், விளைச்சலின் மூலமே நீ. உன்னை வணங்க ஆயத்தமாகின்றேன்”

போகி பண்டிகை சொல்லும் தத்துவம் அதுவே,
அது இந்துக்களின் பெரும் ஞானத்தையும் நன்றிகடனையும் உலகுக்கு எக்காலமும் சொல்லும் விழா