துப்பாக்கி கொடுத்தவனை பெங்களூரில் தூக்கியிருக்கின்றார்கள்
கன்னியாகுமரி மாவட்ட காவலரை சுட்டு கொன்றவர்களுக்கு துப்பாக்கி கொடுத்தவனை பெங்களூரில் தூக்கியிருக்கின்றார்கள்
இது எதை காட்டுகின்றதென்றால் பெரும் சதிநாச திட்டத்துடன் கன்னடம் கேரளம் ஆந்திரா, தெலுங்கானா என தென்னக மாநிலங்களில் ஒரு கும்பல் புகுந்திருக்கின்றது
அது கண்ணுக்கு தெரியா வலைபின்னலுடன் தமிழகம் முழுக்க பரவி கிடக்கின்றது
இந்திய ஐ.என்.ஏவுக்கும் அவர்களுக்கும் அறிவிக்கபடா பெரும் யுத்தம் நடக்கின்றது, அந்த யுத்தத்தில் பயங்கரவாதிகள் ஒருவித இறுக்கத்தில் கோபத்தில் இருக்கின்றனர்
அந்த கோபமே கன்னியாகுமரி பக்கம் காவலரை கொன்றிருக்கின்றது, அந்த தர்பார் படம் போல காவல்துறைக்கு ஒரு அச்சத்தை கொடுக்க அது அக்கொலையினை செய்திருக்கின்றது
துப்பாக்கி கொடுத்தவன் தூக்கபட்ட நிலையில் இனி அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம்
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு வக்கலாத்து வாங்குவது போல இவர்களுக்கும் யாராவது வாங்க வரட்டும் அதன்பின் பார்க்கலாம்
பொதுவாக இந்நாட்டு இஸ்லாமியர் நல்லவர்களே, ஐந்துவேளை தொழுது பரம்பொருளில் ஒன்றியிருக்கும் இஸ்லாமியர் மார்க்கம் அமைதிமார்க்கமே
ஒருசிலர் தவறான ஷைத்தான்களின் போதனையால் திசைமாறி இப்படி கொடும் தீவிரவாதிகளாக மாறிவிடுகின்றனர்
அந்த சில சாத்தான்களுக்காக எல்லா இஸ்லாமியரையும் குற்றம் சொல்லமுடியாது, நல்ல இஸ்லாமிய பெருமக்கள் எந்நாளும் இத்தேசத்துக்கு நற்குடிமக்களாய் இருப்பார்கள் தேசமும் அவர்களை கைவிடாது
அதே நேரம் திசைமாறிவிட்ட இந்த கொடும் தீவிரவாதிகளை சும்மாவும் விடாது