இப்போதைய திமுகவின் பொழுது போக்கு
அரசியலுக்காக முதலில் சீறுவதும் பின் அப்படியே பல்டி அடித்து திரும்புவதும் இப்போதைய திமுகவின் பொழுது போக்கு
ஏதோ சுனாமி போல பொங்குவார்கள், பின் தென்றலாய் முடிப்பார்கள். பெரும் தீபிழம்பாய் எழும்புவார்கள் பின் விட்டில் பூச்சியாய் மின்னி அப்படியே ஓடிவிடுவார்கள்
அது காஷ்மீர் விவகாரம் உட்பட பல விஷயங்களில் தெரிந்தது, இப்பொழுது குடியுரிமை சட்டத்திலும் தெரிகின்றது
குடியுரிமை திருத்தம் சட்டமாக்கபட்டு அமல்படுத்தபட்ட நிலையில் திமுகவின் சுதி குறைந்து, காங்கிரசுக்கும் அதற்கும் முறுகல் வந்து இப்பொழுது திமுக குடியுரிமை சட்ட விவகாரத்தில் இருந்து ஒதுங்குகின்றது
ஒரு விஷயத்தை முழுக்க படித்தபின் போராட வேண்டும்
திமுக தலமைக்கு நிதானமில்லை, அது பேப்பரும் கையுமாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றது, துண்டு சீட்டில் இந்திய சுதந்திரம் 1956 என என எழுதிகொடுத்தாலும் அது போக்கில் வாசிக்கின்றது
எடுப்பார் கைகளில் பிள்ளையான அந்த தலமையினை ஆளாளுக்கு குழப்பி அடிக்கின்றார்கள்
அதுவும் இந்த பாஜக அரசு எமபாதக அரசாக இருக்கின்றது, ஆம் அவர்களின் ராஜதந்திரம் வித்தியாசமானது
தீரா சிக்கலை தீர்க்க முதலில் கொளுத்தி போடுவார்கள், எதிர்கட்சிகள் பொங்கும், அப்பொழுது மக்களே இவர்களின் உண்மை முகத்தை பாருங்கள் என கொஞ்ச நாளைக்கு விட்டுவிடுவார்கள்
இவைகளும் ஆடி தீர்க்கும் மக்கள் முகம் சுளிப்பார்கள், அத்தோடு மக்களே பார்த்தாகிவிட்டதா? நல்லது இனி உங்கள் வேலையினை பாருங்கள் நாங்கள் எங்கள் வேலையினை காட்டுகின்றோம் என மத்திய அரசு முறைக்க தொடங்கும் இவர்கள் அடங்குவார்கள்
அதாவது ஒவ்வொரு முறையும் இவர்களை ஆடவிட்டு மக்கள் முன் தோலுரித்துவிட்டே அடக்குகின்றது மத்திய அரசு, இது ஒரு தேர்ந்த ராஜதந்திரம்
அனுபவமில்லா திமுக தலமை இதில் அழகாக சிக்குகின்றது
மொத்தத்தில் இப்பொழுதெல்லாம் “திமுகவா? அட அது காமெடி கட்சியப்பா, பழனிச்சாமியே அவர்களை அசால்டாக டீல் செய்கின்றார். சும்மா கத்துவார்கள் அதன்பின் அப்படியே அடங்கிவிடுவார்கள்
காங்கிரஸுடன் இருக்க ஒரு ஆட்டம், பாஜக பக்கம் வர ஒரு நாடகம் என எதையாவது செய்வார்கள், பாவம் இம்ரான்கான் இவர்களை நம்பிகொண்டிருக்கின்றார், அவர் நிலமைதான் ஈழத்து பிரபாகரன் நிலைபோல மகா மோசம்” என்பதோடு இந்தியா திமுகவினை பற்றிய செய்தியினை முடித்துவிடுகின்றது