அமெரிக்காவினை மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றுவோம்

அமெரிக்காவினை மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றுவோம் என ஈரானும் அவர்களின் இன்னொரு இயக்கமான ஹெஸ்புல்லாவும் கூட்டாக அறிவித்திருக்கின்றன‌

ஹெஸ்புல்லா மிக கடுமையாக எச்சரிக்கின்றது, அமெரிக்காவினை வளைகுடாவினை விட்டே விரட்டுவோம் என சீறுகின்றது ஹெஸ்புல்லா, ஈரானும் “இணைந்த கைகள் நாமானால்” என பாட ஆரம்பித்துவிட்டது

ஹெஸ்புல்லா ஓரளவு வலுவான தீவிரவாத இயக்கம், முன்பு லெபனானில் இருந்து அமெரிக்க முகாம்களை விரட்டிய வீர வரலாறு அவர்களுக்கு உண்டு

இதனால் அரேபியாவில் இனி அமெரிக்க முகாம்கள் மேலான தாக்குதல் கடுமையாக இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகின்றது

அமெரிக்கா அவ்வளவு எளிதில் அங்கிருந்து அசையாது, ஒருவேளை யுத்ததை தவிர்க்க விரும்பி சில தளங்களில் இருந்து வெளியேறினாலும் அரபு கடலில் நிற்கும் அமெரிக்க பிரமாண்ட கப்பல்களை அசைத்துபார்க்க இவர்களால் முடியாது

ஹெஸ்புல்லா மற்றும் இரானின் மிரட்டல் கடுமையாக வந்துள்ள நிலையில் இஸ்ரேலோ “ஹெஸ்புல்லாவெல்லாம் ஒரு ஆளுன்னு, எங்களை அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? நீங்க உங்கபாட்டுக்கு இருங்க அங்கிள்” என அமெரிக்காவினை நோக்கி சொல்கின்றது

அத்தோடு உள்ளுக்குள் மகிழ்கின்றது

ஆம் ஹெஸ்புல்லாவும் ஈரானும் மிக தேர்ந்த ராஜதந்திரமாக இஸ்ரேலை விட்டுவிட்டு அமெரிக்காவினை எச்சரிக்கின்றது, இது அரசியல், ஆனால் தன் பாதுகாப்பை பலபடுத்திகொண்டே நிலமையினை கவனிக்கின்றது இஸ்ரேல்

ஹெஸ்புல்லா மற்றும் இரானின் தாக்குதல் ஈராக் மற்றும் சிரிய ஜோர்டானிய நிலைகள் மேல் இருக்கவே அதிகம் எனினும் குவைத், பஹ்ரைன் கத்தார் சவுதி என மற்ற அமெரிக்க முகாம்களும் கடும் பாதுகாப்புக்குள் வந்திருக்கின்றன