அயோக்கியர்களுக்கு நீண்ட ஆயுளும், நல்லோருக்கு அல்ப ஆயுளும் ஆண்டவன் அருள்வதேன்?

அயோக்கியர்களுக்கு நீண்ட ஆயுளும், நல்லோருக்கு அல்ப ஆயுளும் ஆண்டவன் அருள்வதேன்

நல்லோர் தங்கள் கடமையினை முடித்தபின், இனியும் செய்ய ஒன்றுமில்லை என்றபின் உடனே கிளம்புகின்றனர்

அயோக்கியர்களுக்கோ தங்கள் சித்தாந்தம் தங்கள் கண்முன் தோற்று, தங்கள் இயக்கமும் கொள்கையும் கண்முன்னே சரியும் கொடுமையினை காண நீண்ட ஆயுளை இறைவன் அருள்கின்றான்

அறிவுடை பகுத்தறிவு இயக்கம் என தொடங்கபட்ட தன் இயக்கம், ஒரு சினிமாக்காரனை அரசுமேடையில் ஏற்றியதை எண்ணி நொந்து செத்தார் ஈரோடு ராம்சாமி

தனக்கு பின் தன் கட்சி கோமாளி கூடாராமாகும் எனும் அச்சம் கருணாநிதிக்கும் இருந்திருக்கலாம்

எந்த ராமனின் படத்தை செருப்பால் அடித்தாரோ, அந்த ராமரின் அயோத்தி கோவிலை காண , அது மகா ஜொலிப்புடன் மின்னுவதை காண இன்னும் பல்லாண்டுகள் உயிரோடு இருப்பார் கி.வீரமணி, இருந்தாக வேண்டும்

இந்துக்களின் இப்போதைய‌ பிரார்தனையெல்லாம் வீரமணி 100 ஆண்டுகள் கண்டிப்பாய் வாழவேண்டும், சுபவீ போன்ற கோஷ்டிகளும் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்பதன்றி வேறல்ல.