காஷ்மீரில் பாகிஸ்தான் தேர்ந்த உளவாளியினை வைத்திருக்கின்றது

பஞ்சாபிய சீக்கியர் வீரமும் நாட்டுபற்றும் மிக்கவர்கள், குறிப்பாக பாகிஸ்தான் மேல் எப்பொழுதும் தீரா வன்மத்தில் இருப்பவர்கள் என கணக்கிட்டுத்தான் இந்திய அரசு சீக்கியர்களை வட எல்லையில் அமர்த்தும்

ஆம் பிரிவினை காலம் தொடங்கி சமீபத்திய பாகிஸ்தானிய குருத்துவாரா தாக்குதல் வரை சீக்கியரின் ரணம் பெரிது, இதனால் கொஞ்சமும் தயக்கமின்றி சொந்த எல்லையிலும் அவர்களையே தேசம் பணிக்கு அமர்த்தும்

பொதுவாக ராணுவத்தில் இருப்பவர்களை சொந்த மாநில எல்லைக்கு அனுப்பமாட்டார்கள், அது சரிவராது, தான் ஆடாவிட்டாலும் தசை ஆடினால் முடிந்தது விஷயம்

ஆனால் பஞ்சாபிய சீக்கியரை தேசம் நம்பியது, அப்படித்தான் அந்த தேவிந்தர் சிங் எனும் சீக்கியனை டி.எஸ்.பியாக காஷ்மீரில் தேசம் நிறுத்தியது, அவன் முன்பு ஜனாதிபதி விருதெல்லாம் பெற்றவன்

இப்பொழுது முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காக அவன் கைது செய்யபட்டதில் தேசம் ஆடிகிடக்கின்றது

ஆம் காஷ்மீரில் பாகிஸ்தான் தேர்ந்த உளவாளியினை வைத்திருக்கின்றது, இதுகாலமும் நாம் ஏமாந்திருக்கின்றோம்

உளவு உலகில் இதெல்லாம் சகஜம் எனினும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் மகா தேர்ந்த இந்த ஆட்டத்தை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

எப்படியோ இப்பொழுதாவது ஒரு உளவாளியினை தூக்கிவிட்டோம், மீதமிருக்கும் உளவாளிகளையும் உடனே தூக்கினால் தேசத்துக்கு நல்லது

இவ்வளவு காலமும் பிடிபடாத கறுப்பு ஆடு அங்கு மத்திய அரசின் நேரடி ஆட்சி வந்தபின் சிக்குகின்றான் அல்லவா? இன்னும் நிறைய ஆடுகள் பிடிபடும், காரணம் இவை எல்லாம் முந்தைய காஷ்மீரிய அரசியல்வாதிகளால் மறைமுகமாக வளர்க்கபட்டவை

இந்த டி.எஸ்.பி வீட்டில் தீவிரவாதிகள் இருந்தது போல தமிழக திராவிட அரசியல்வாதிகள் வீட்டில் இருப்பார்களா என்றால் முன்பு ஒரு காலத்தில் இருந்தார்கள், புலிகள் இங்கு வெறியாட்டம் ஆடி ராஜிவினை கொன்ற காலங்களில் எல்லா திராவிட வீடுகளிலும் புலிகள் இருந்தார்கள்

ஆனால் காட்சிகள் மாறியபின் திராவிட சிங்கங்கள் அவர்களை ஏற்க மறுத்தன அதனால் புலிகளும் கடைசியாய் அழிந்து போனார்கள், ஆம் புலிகளை நம்ப வைத்து அழித்ததில் திராவிட கும்பல்களுக்கு எக்காலமும் பழி உண்டு

இதனால் இஸ்லாமிய தீவிரவாத‌ இயக்கங்கள் திராவிட புள்ளிகள் வீட்டில் தங்காது, அவைகளை நம்பாது

மாறாக‌ உங்கள் அனுதாபம் மட்டும் போதும் என ஒதுங்கிகொண்டு போலிசை சுடும், குண்டு வைக்க திட்டமிடும்

நெல்லை கண்ணன் என்பவரும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கமுடியாது,
காரணம் அவர்கள் அசைவ உணவுக்காரர்கள்,

டான் நெல்லை கண்ணன் பிரபல ரெவிடியானாலும் அவர் சுத்த சைவம். இதனால் நெல்லை கண்ணன் வீட்டில் அவர்கள் இருக்க வாய்ப்பே இல்லை