இந்த உலகில் எல்லாமே பணம், பணமே அரசியல்
இந்த உலகில் எல்லாமே பணம், பணமே அரசியல். அது ஈரானிய விவகாரத்திலும் தெரிகின்றது
விஷயம் ஒன்றுமில்லை , இன்னும் ஈரானுக்கு சாதகமாக பேசிகொண்டிருக்கும் நாடுகள் பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் பிரிட்டன். இவை கூட்டாக ஈரானை மொத்தமும் ஒதுக்கி தண்டிக்க கூடாது மாறாக இன்னும் அவசகாசம் வழங்கலாம் என சொல்லிகொண்டிருக்கின்றன
வசூல் ராஜா எம்பிபிஎஸ் பிரகாஷ்ராஜ் போல இதை கேட்டு அழுதுகொண்டே சிரிக்கின்றார் டிரம்ப்
இவர்கள் மூவரும் அவ்வளவு நல்லவர்களா என்றால் இல்லை, வேறு என்ன விவகாரம்
ஈரான் 40 ஆண்டுகளாக உலகில் இருந்து அதாவது நவீன உலகில் இருந்து தனிமைபட்டு நிற்கும் பூமி அதன் எண்ணெய் கிணறுகள் கூட பழமையானவை
அவை நவீன யுத்திக்கு மாறவேண்டிய அவசியமும் கட்டாயமும் உள்ளது, இப்படி ஏகபட்ட துறைகள் புதுப்பிக்கபட வேண்டியவை
அந்த தொழில்வாய்ப்பினை நாம் பெறலாம் பல பில்லியன் டாலர் அல்ல டிரில்லியனையும் அது கொடுக்கும் என்பது இந்த தாதாக்களின் கணக்கு அதனால் ஈரானை அணைக்க விரும்புகின்றார்கள்
அமெரிக்காவுக்கு ஈரானிய எண்ணெய் மேல் கண், ஐரோப்பாவுக்கோ தொழில் வாய்ப்பு மேல் கண், இஸ்ரேலுக்கோ ஈரானிய ஏவுகனை மற்றும் அணுகுண்டுமேல் கண் என விளையாட்டு சுவாரஸ்யமாக நடக்கின்றது