ஜல்லிகட்டு போராட்டம் இனி வேறுவடிவில் வரலாம்

ஜல்லிகட்டு போராட்டம் இனி வேறுவடிவில் வரலாம் அதற்கான காட்சிகள் தொடங்கிவிட்டன‌

தமிழக அரசு ஒரு வித்தியாசமான சட்டம் இயற்றியிருக்கின்றது, அது நாட்டுமாடுகள் இனபெருக்கம் செய்ய சில கட்டுபாடுகளை விதிக்கின்றது

இது மேலோட்டமாக பார்த்தால் சரியென தோன்றினாலும் அதன் உள் அர்த்தம் வில்லங்கமானது

சட்டம் என்ன சொல்கின்றதென்றால் இனி மாடுகளின் இனபெருக்கம் அரசின் விதிக்கு உட்பட்டு நடக்க வேண்டும் மாடுகள் ஊசி மூலம் சினைபடுத்தவேண்டும், நாட்டுமாடு மூலம் சினைபடுத்தினால் கடும் விதிகளை பின்பற்ற வேண்டும் மீறினால் அரசு விடாது

இதனால் என்னாகும் என்றால் நாட்டுமாடுகளின் வாரிசு இல்லாமல் போகும், வருங்காலத்தில் இன்னும் 30 ஆண்டுகளில் ஜல்லிகட்டுக்கு காளைகள் இல்லாமல் போகும்

பின் எப்படி ஜல்லிகட்டு ஆடுவது

விவகாரம் தமிழக பால் சந்தையினை முழுக்க கைபற்ற வெளிநாட்டு பசுக்களை இறக்கி அதன் சினைபடுத்துதல் வரை பெரும் பணம் செய்ய ஒரு சக்தி முயல்கின்றது, அந்த சக்தி ஜல்லிகட்டை நிறுத்தினால் லாபம் என சிந்தித்தது

இப்பொழுது ஜல்லிகட்டு காளைகளே உருவாகாமல் தடுக்க இப்படி வருகின்றது

முன்பு ஜல்லிகட்டை மீட்டவர் பன்னீர்செல்வம், ஜல்லிகட்டின் தீவிர வெறியர் விஜயபாஸ்கர்

இவர்கள் இருக்கும் அமைச்சரவையில் இதை எப்படி ஒப்புகொண்டார்கள் என்பதுதான் தெரியவில்லை

எனினும் ஜல்லிகட்டு காளை உருவாக்கம் மண் சார்ந்தது, சண்டை சேவல்கள் பிரயத்யோகமாக உருவாக்கபடுவது போல் ஜல்லிகட்டு காளையும் எப்படியும் உருவாகிவரும் என அவர்கள் நம்பலாம்

அல்லது இம்மாதிரி சட்டத்தை எவன் மதிப்பான்? “லஞ்சம் வாங்காதே””வோட்டுக்கு காசு கொடுக்காதே” என்று கூடத்தான் சட்டம் உண்டு , அதெல்லாம் நாம் பின்பற்றுகின்றோமா என்ன என அவர்களாகவே கூடி சிரித்துவிட்டு சட்டத்தை கொண்டுவந்திருக்கலாம்