இதுதான் திராவிட கோமாளித்தனம்

அவர்கள் சொன்னது தனி திராவிட நாடு என்பது, அதற்காக அவர்கள் போட்ட நாடகம் சீமான் கோஷ்டியினையும் மிஞ்சும்

அண்ணாதுரை திராவிட நாடு அடைந்தே தீருவோம் என பேசிய பேச்சுக்கள் கொஞ்சமல்ல‌

ஒரு கட்டத்தில் அது முடியாது என தெரிந்தது, மெல்ல கோரிக்கையினை கைவிட்டு தமிழக மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைத்து சாதனை என்றார்கள்

அதில் என்ன சாதனை என்பதுதான் தெரியவில்லை

அவர்கள் தமிழ்நாடு என பெயர் மாற்றாவிட்டாலும் இங்கு என்ன ஆப்ரிக்க மொழியும் லத்தீனுமா பேசிகொண்டிருப்பார்கள்?

தமிழ்நாடு என பெயர் மாற்றபட்டிராவிட்டால் இங்கு தமிழரே இருந்திருக்கமாட்டார்களா? தமிழ் பேசபடாமலே போயிருக்குமா?

தமிழ் பேசும் தமிழகத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியதில் என்ன சாதனை என்பதுதான் தெரியவில்லை..

சந்தணமரம் நிறைந்த காட்டுக்கு சந்தணகாடு என நானே பெயரிட்டேன் என ஒருவன் சொன்னால் எப்படி இருக்கும்?

மான்கள் நிரம்பிய கூட்டத்துக்கு மான்கூட்டம் என எவனாவது பெயரிட்டு பேனர் வைத்தவன் நான், நான் இல்லையென்றால் இது மான்கள் என உலகுக்கு தெரியாமலே போய்விடும் என்றால் எப்படி இருக்கும்?

இதுதான் திராவிட கோமாளித்தனம்.